சமாதிக்கு காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாம்- அரசை சாடும் கனிமொழி

news18
Updated: August 10, 2018, 5:42 PM IST
சமாதிக்கு காட்டிய அக்கறையை ஸ்டெர்லைட்டில் காட்டியிருக்கலாம்- அரசை சாடும் கனிமொழி
திமுக எம்பி கனிமொழி
news18
Updated: August 10, 2018, 5:42 PM IST
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு மெத்தனமாக இருந்து கோட்டை விட்டுவிட்டதாக திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஆலை நிர்வாகம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்து கொள்ளலாம் என அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் உற்பத்தி, பராமரிப்பு போன்ற வேறெந்த பணிகளையும் மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி “வேதாந்தா நிறுவனம் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. இந்த வழக்கில் தமிழக அரசின் சார்பாக சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜரானார். தமிழக அரசின் வழக்கறிஞர் இந்த வழக்கில் வாதாட தகுந்த தயாரிப்புகளுடன் சென்றிருக்க வேண்டும். ஆனால் இது குறித்த கலந்துரையாடல் உள்ளிட்ட பணிகள் நேற்று காலை 10 மணிக்குத்தான் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த தயாரிப்புகளை ஒரு நாளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக சி.எஸ். வைத்தியநாதன் உச்சநீதிமன்றத்தில் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கக்கூடாது என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்” என்றும் கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Loading...

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் மோசமான ஆட்சியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு வேண்டுமென்றே இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...