அண்ணாமலையை சிக்க வைக்கும் மதன்... பாஜகவில் என்ன நடக்கிறது

அண்ணாமலை மதன்

பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மதன் ரவிச்சந்திரன் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 • Share this:
  பா.ஜ.கவின் மாநிலச் செயலாளராக இருந்த கே.டி.ராகவன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து யூட்யூபர் மதன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கே.டி.ராகவன் மேல்சட்டையின்றி ஒரு பெண்ணுடன் வீடியோ கால் பேசும் காட்சிகளும், முகம் தெரியாத நபர் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சிகளும் இருந்தன. இந்தவீடியோ அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்களை அண்ணாமலையின் அனுமதியுடன்தான் வெளியிட்டேன் என்றார் மதன். ஆனால், மதன் ரவிச்சந்திரன் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டார்.

  இந்தநிலையில், யூட்யூபர் மதன் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவில் பேசும் மதன், ‘கே.டி.ராகவன் பாலியல் வீடியோ தொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை தவறானது. அவருக்கு நான் வீடியோ பதிவை முழுவதுமாக காட்டினேன். அவர்தான் இந்த வீடியோ யூட்யூப்பில் வெளியிடுவதற்கான வழிமுறைகளைச் சொன்னார். தற்போது, மாற்றி பேசுகிறார்’என்று தெரிவித்தார். தொடர்ந்து அண்ணாமலை குரல் ஒலிப்பதிவு ஒன்றும் அதில் ஒளிபரப்பானது.  அதில், பேசும் அண்ணாமலை குரல், ‘நான் டெல்லியைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன். அவர்களிடம் இந்த வீடியோவைக் காட்டி கட்சியிலுள்ள மோசமானவர்களை நீக்குவோம். இந்த வீடியோவை ரெண்டு விதமாக கையாளலாம். இந்த வீடியோ வெளியே விட்டு பரபரப்பை ஏற்படுத்தலாம் அல்லது அந்த வீடியோவில் உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கட்சியை சரிசெய்யலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாம் எந்த வழியில் செல்லாம் என்பதை முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. தொடர்ந்து பேசிய பெண்களிடம் தவறாக நடந்தவர்கள் மீது நடவடிக்கை என்று அண்ணாமலையிடம் வலியுறுத்தியபோது, எனக்கு அவ்வளவு தைரியம் இல்லை என்று அண்ணாமலை தெரிவித்தார் என்று மதன் விவரித்தார். தொடர்ந்து பேசும் மதன், ‘சி.டி.ரவி உள்ளிட்ட அனைவர் மீதும் குற்றம்சாட்டுகிறார்.
  Published by:Karthick S
  First published: