யோகி பாபு நாயகனாக நடிக்கும் மற்றுமொரு திரைப்படம் தமிழில் உருவாகிறது. மலையாளத்தின் இளம் இயக்குனர் ரெஜிஷ் மிதிலா இந்தப் படத்தை இயக்குகிறார்.
மலையாளத்தில் படம் இயக்குகிறவர்களின் அதிகபட்ச கனவாக இருந்தது தமிழில் படம் இயக்க வேண்டும் என்பது தான். இப்போது இந்தி வரை சென்றுவிட்டார்கள். பாசில், பரதன், ப்ரியதர்ஷன், லோகிததாஸ், சித்திக், ரோஷன் ஆண்ட்ரூ உள்பட இரண்டு டஜன் மலையாள இயக்குனர்கள் தமிழில் படம் இயக்கியிருக்கிறார்கள். அடுத்து புதிதாக வந்திருப்பவர் ரெஜிஷ் மிதிலா.
இவர் லால் பகதூர் சாஸ்திரி, வாரிக்குழியில் கொலபாதகம் போன்ற படங்களை இயக்கியவர். இதில் வாரிக்குழியில் கொலபாதகம் வெற்றிப் படம். கடைசியாக இந்நு முதல் (இன்று முதல்) என்ற படத்தை எடுத்தார். இது 2021 மார்ச் 28-ல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதுவொரு பேண்டஸி திரைப்படம். இந்நிலையில் யோகி பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை பூஜையுடன் ரெஜிஷ் மிதிலா தொடங்கியுள்ளார். படத்தை அவரே தயாரிக்கிறார். யோகி பாபு நாயகனாக நடிக்க, கருணாகரன், ரமேஷ் திலக், ஊர்வசி உள்பட பலர் நடிக்கின்றனர்.
ரெஜிஷ் மிதிலா இயக்கிய இந்நு முதல் படத்தின் தமிழ் ரீமேக் இது என்கிறார்கள். குடும்பத்துக்காக கடன் வாங்கி அதனை கட்ட முடியாமல் தவிக்கும் இளைஞனுக்கு வெளியாள் வடிவில் வரும் கடவுள் உதவி செய்வது தான் இந்நு முதல் படத்தின் கதை. ஆனால், இயக்குனர் தரப்பில் ரீமேக் குறித்து இன்னும் உறுதியான தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.