பிப்.12-ல் திருநெல்வேலிக்கு வருகிறார் யோகி ஆதித்யநாத்: தமிழிசை தகவல்

பாஜக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம் என்கிறார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

பிப்.12-ல் திருநெல்வேலிக்கு வருகிறார் யோகி ஆதித்யநாத்: தமிழிசை தகவல்
தமிழிசை சவுந்தரராஜன்
  • News18
  • Last Updated: February 4, 2019, 6:31 PM IST
  • Share this:
‘தமிழகத்தில் பா.ஜ.க. வலுப்பெற்று வருகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்’ என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.

திருப்பூரில் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடி வரும் 10-ம் தேதி திருப்பூருக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் 19-ம் தேதி கன்னியாகுமரிக்கு  வருகை தர உள்ளார்.

பிரதமரைத் தொடர்ந்து வரும் 12-ம் தேதி உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திருநெல்வேலிக்கு வருகிறார். மேலும் பாஜக தலைவர் அமித் ஷா வரும் 14-ம் தேதி ஈரோடு வருகிறார்.


பாஜக அரசு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது . இம்முறை தலைநிமிர்ந்து வாக்கு கேட்போம். மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மூலம் சாமானிய மக்களின் வீடு வாங்கும் கனவு நிறைவேற உள்ளது. சாரதா சிட் பன்ட்ஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தாவில் விசாரிக்க சென்றனர் என்றார் தமிழிசை சவுந்தர்ராஜன்.

Also watch

First published: February 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்