Home /News /tamil-nadu /

130 கோடி மக்கள் சார்பாக தமிழ் மண்ணிற்கு நன்றி : கோவையில் யோகி ஆதித்யநாத் பேச்சு

130 கோடி மக்கள் சார்பாக தமிழ் மண்ணிற்கு நன்றி : கோவையில் யோகி ஆதித்யநாத் பேச்சு

யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத்

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

    கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.

    விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொது கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் யோகி ஆதித்யநாத். “கோவை மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்" என தமிழில் பேசினார் உரையைத் தொடங்கினார். பின்னர் அவரின் உரையை, தேசிய இளைஞரணி துணை தலைவர் ஏ.பி.முருகானந்தம் மொழி பெயர்த்தார்.

    தொடர்ந்து யோகி ஆதித்யநாத் பேசுகையில், “கோவை மண்ணில் இருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார். ராமரின் புண்ணியபூமி உத்திரபிரதேசம். ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த கோவையை ஜவுளிநகராக, கல்வி தரத்தை உயர்த்தும் நகரமாக உயர்த்தி இருக்கின்றனர்.

    தமிழக புண்ணிய பூமிக்கு வர இன்னொரு காரணம், உத்தரபிரதேசத்தில் கட்டப்படும் ராமர் ஆலயத்தின் நிர்ணமானத்திற்காக 120 கோடி ரூபாயை இந்த மண் வழங்கி இருக்கின்றது. அதற்காக 130 கோடி மக்கள் சார்பாக தமிழக மண்ணிற்கு நன்றி சொல்லி கொள்கின்றேன்.

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒன்றை சொல்லிகொள்ள விரும்புகின்றேன், இராணுவ வழிதடம் சுயசார்பு பாரதத்தை பறைசாற்றும்படி இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை தமிழகத்தின் மீது இருக்கின்றது. தமிழகத்தில் இராணுவ வழிதடம் அமைத்து முடிக்கும் போது ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகும்.

    இந்தியா முழுவதும் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றன. மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றேன். வரும் தேர்தல்களில் அஸ்ஸாம், மேற்குவங்கம் மாநிலங்களில் நிச்சயம் ஆட்சியை பிடிப்போம்.

    தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும், வளர்ச்சி ஒன்றே நமது தாராக மந்திரமாக இருக்கின்றது. ஓரே நோக்கத்தின் அடிப்படையில் பாஜக செயல்படுகின்றது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே புதிய விடியலை ஏற்படுத்தும்.

    இந்தியாவில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வீடு, சிலிண்டர், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்திற்கு 54 லட்சம் கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளது மத்திய அரசு.

    விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்குகின்றது. மெட்ரோ ரயில், ஐஐஎம் போன்றவை தமிழகத்திற்கு கொண்டு வரபட இருக்கின்றன. வரும் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அதிகபடியாக நிதி மற்றும் திட்டங்கள் தமிழகத்தை வந்து சேரும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையும் இடம் பெற்றுள்ளது. கோவைக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி இருக்கின்றது.

    Must Read : ‘எதற்கும் ஒரு எல்லை உண்டு...’ ஜோதிமணியை எச்சரிக்கும் அண்ணாமலை

     

    அதிமுக-பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான்” இவ்வாறு கூறினார் யோகி ஆதித்யநாத்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Bjp campaign, Coimbatore South Constituency, TN Assembly Election 2021, Vanathi srinivasan, Yogi adityanath

    அடுத்த செய்தி