நேற்று அண்ணாமலை, இன்று பொன்.ராதாகிருஷ்ணன்.. அடுத்தடுத்து திமுகவுக்கு குவியும் பாராட்டு

நேற்று அண்ணாமலை, இன்று பொன்.ராதாகிருஷ்ணன்.. அடுத்தடுத்து திமுகவுக்கு குவியும் பாராட்டு

நேற்று அண்ணாமலை, இன்று பொன்.ராதாகிருஷ்ணன் என அடுத்தடுத்து திமுக அரசுக்கு பாஜக தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 • Share this:
  முன்னதாக நேற்றைய தினம் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகின்றன. எந்த ஒரு ஆட்சிக்கும் 6 மாத கால அவகாசம் அளிக்க வேண்டும். இந்த ஆட்சியில் தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மாவட்ட அளவில் நல்ல ஆட்சியாளர்களைப் பொறுப்புகளில் நியமித்துள்ளனர். அதிகாரிகள் திறம்பட வேலை செய்கின்றனர்.

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை வரவேற்கிறோம். தமிழக அரசின் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு மக்களுக்கு பயன் அளிக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை என பாராட்டியிருந்தார்.

  Also read: திமுக ஆட்சியை விமர்சிக்கமாட்டோம்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் பாராட்டுக்குரியது: அண்ணாமலை

  இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது, திமுக தேர்தல் வாக்குறுதியின்படி தற்போது பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஆட்சிக்கு வந்து கடந்த 100 நாட்களில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

  மேலும் திட்டங்கள் திமுக அரசு ஏராளமான வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றி உள்ளது. இனியும் திமுக அரசு மேலும் பல திட்டங்களை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த 100 நாட்களில் திமுக அரசு மேலும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதிமுக பாஜக கூட்டணி எப்போது போல் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி எப்போதும் போல வலிமையான கூட்டணியாக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக நாங்கள் தயாராகி வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணி தொடரும். உள்ளாட்சி தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: