பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு முதல் ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என ரஜினிகாந்த் தெரிவித்தது வரையில் 2022 ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு அரசியலில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.
ஆகஸ்ட் 1; தமிழகத்தின் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் அறிவித்தார். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ரூ.20,000 கோடி ஆகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால், விமான நிலையம் அமைக்க பரந்தூர் பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 2; தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது. மீறுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதினார். விசிக மக்களவை உறுப்பினர் ரவிகுமார் வலியுறுத்திய நிலையில், இவ்வாறான தடை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8; ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசினார். இதுகுறித்து விளக்கம் அளித்த ரஜினிகாந்த், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியலும் பேசினோம்” என்று தெரிவித்தார். ஆளுநர் மாளிகை அரசியல் பேச்சுக்கான அலுவலகம் இல்லை என மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
ஆகஸ்ட் 18: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் தனது முழு அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது. அதில், 17 காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.
ஆகஸ்ட் 19; பல்கலைக் கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்திற்கு புறம்பானது. இதுதொடர்பான மசோதாவுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார்.
ஆகஸ்ட் 27; ஜெயலலிதா மரணம் தொடர்பான 600 பக்க விசாரணை அறிக்கையை ஆறுமுகசாமி ஆணையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.