முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Year Ender 2021: பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்த தமிழக அரசியல் களம்

Year Ender 2021: பரபரப்பும் திருப்பங்களும் நிறைந்த தமிழக அரசியல் களம்

தமிழக அரசியல் 2021

தமிழக அரசியல் 2021

Year Ender 2021 | முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று கூறி பதவியேற்று கவனத்தை ஈர்த்தார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

தமிழக அரசியல் களத்தில் திருப்பங்களும் பரபரப்புகளும் நிறைந்ததாக ஆண்டாக 2021ஆம் ஆண்டு காணப்பட்டது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக எதிர்கட்சியாக அமர்ந்தது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 159 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெற்றது. ஆளும்கட்சியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக அரியணை ஏறியது .

முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்றார். ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்று கூறி பதவியேற்று கவனத்தை ஈர்த்தார். உதயநிதி ஸ்டாலின் முதன் முறையாக எம்.எல்.ஏ.வானார். இந்த காட்சியை துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீரோடு ரசித்தார்.

மு.க.ஸ்டாலின் பதவியேற்பு

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் தமிழக சட்டசபைக்குள் நுழைந்தனர். இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அண்ணாமலை பாஜக தமிழகத் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தோல்வியடைந்தார். பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அதன் பின்னர், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறித்து.

நாம் தமிழர் கட்சி தனித்து நின்று தேர்தல் களம் கண்டது, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைக்காளர் சீமான் உள்ளிட்ட அனைவரும் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அக்கட்சி கணிசமான வாக்கு எண்ணிக்கையைப் பெற்று தனது வாக்கு வங்கியை பலப்படுத்தியது.

ரஜினிகாந்த்

அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறி, நடிகர் ரஜினி ஜூலை 12ஆம் தேதி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அத்துடன், ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். இனி ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அணிகள் எதுவும் இன்றி, ரசிகர் நற்பணி மன்றமாக மட்டுமே செயல்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாத இறுதியில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா விடுதலையானார். கொரோனா தொற்று காரணமாக ஓய்வில் இருந்த சசிகலா, பிப்ரவரி மாத தொடக்கத்தில் தமிழகம் வந்தார். அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

தீவிர அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்திய சசிகலா, மார்ச் மாதத்தில் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறி அறிக்கை வெளியிட்டார். ஆன்மீக பயணம் கிளம்பிய சசிகலா பின்னர், அதிமுக பிரமுகர்களுடன் செல்போனில் பேசினார். ஆடியோ ரிலீஸ் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். விரைவில் வந்துவிடுவேன் என்றும் தொடர்ந்து கூறிவந்தார்.

சசிகலா

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது. அந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் ஆகஸ்ட் 31ஆம் தேதி பஞ்சாப் மாநில ஆளுநராக பதவியேற்றார். எனவே, தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

மு.க.ஸ்டாலின், ஆர்.என்.ரவி

கோயில்களில் அன்னதானத்தில் அவமதிக்கப்படுவதாக நரிக்குறவச் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி அளித்த பேட்டியின் எதிரொலியாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, நரிக்குறவப் பெண் அஸ்வினியுடன் அமர்ந்து கோயில் அன்னதான உணவு சாப்பிட்டார். நவம்பர் 4ஆம் தேதி நரிக்குறவ பெண் அஸ்வினி வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறவர் மற்றும் இருளர் பழங்குடியின மக்களுக்கான 4.5 கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கே.சி.வீரமணி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர் விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

ஓபிஎஸ்-இபிஎஸ்

டிசம்பர் 6ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Read More : நகைக்கடன் தள்ளுபடி.. யார் யாருக்கு பலன் கிடைக்கும் - விவரங்கள் இதோ

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா, அரசுடைமை ஆக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற தீர்ப்பால் அந்த இல்லத்தின் சாவி ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளாக ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

First published:

Tags: MK Stalin, TamilNadu Politics, YearEnder 2021