ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Year Ender 2021 : “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்“ முதல்வர் ஸ்டாலின் மறக்க முடியாத ஆண்டு

Year Ender 2021 : “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்“ முதல்வர் ஸ்டாலின் மறக்க முடியாத ஆண்டு

முக ஸ்டாலின்

முக ஸ்டாலின்

Year Ender 2021 : தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 07-ம் தேதி பதவிறே்றார். அப்போதைய ஆளுநர் பன்வாரிலலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு மறக்க முடியாத ஒன்று என்றே சொல்லலாம். திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தல் இதுவாகும். கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பது, தொகுதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது என்று மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஸ்டாலின் பெற்றார். ஸ்டாலின் தலைமையிலான திமுக 25 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. திமுக ஆட்சி அமைத்த பயணம் குறித்து தற்போது பார்க்கலாம்.

பிப்ரவரி 26 : தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பிப்ரவரி 26-ம் தேதி அறிவித்தது. தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12-ம் தேதி தொடங்கி மார்ச் 19-ம் தேதி வரை நடைபெற்றது. வேட்பு மனுவை வாபஸ் பெற மார்ச் 22-ம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 06 : தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகின.

மே 02 : தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை முடிவு 

திமுக கூட்டணி - 159 இடங்களில் வெற்றி திமுக - 125

காங்கிரஸ் - 18

விசிக - 4

மதிமுக (உதயசூரியன் சின்னம்) - 4

சிபிஎம் - 2

சிபிஐ - 2

1996 ம் ஆண்டுக்கு பிறகு திமுக முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்று அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் பலம் தேவை இல்லாமல் அறுதி பெரும்பான்மை பலத்தை பெற்று திமுக வெற்றி பெற்றது.

மே 03 : திமுக தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

மே 07 : தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவிறே்றார். அப்போதைய ஆளுநர் பன்வாரிலலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவி பிரமானம் செய்து வைத்தார். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்“ என்று ஸ்டாலின் பதவியேற்றதை பார்த்த அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் வடித்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.

முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும் கருணாநிதி, அண்ணா, பெரியார் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு கோட்டைக்கு சென்றார். அங்கு முதல்-அமைச்சர் இருக்கையில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000, ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, சாதாரண கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் வழங்குதல், புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

அதை தொடர்ந்து இன்று வரை மு.க.ஸ்டாலின் முதல்வராக பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உச்சம், மழை வெள்ள பாதிப்பு உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு தேவையான சேவைகளை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பூர்த்தி செய்து வருகிறது.

First published:

Tags: YearEnder 2021