ஒவ்வொரு வருடமும் புது புது விஷயங்கள் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற அதிக பேர் பயன்படுத்தும் சமூக ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் சில குறிப்பிட்ட விஷயங்கள் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் எந்தெந்த பிரிவுகளில் என்னென்ன கீவேர்ட்ஸ் ட்ரெண்டிங் ஆகியுள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கிய பிரிவு
கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ஆரோக்கிய பிரிவில் கொரோனா என்கிற வார்த்தை தான் அதிக பேர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக கொரோனா இரண்டாம் அலையை பற்றி அதிக பேர் தகவல்களை பகிர்ந்துள்ளனர். இந்த வரிசையில் மேலும் சில வார்த்தைகள் அடங்கும். Prayer, Oxygen, Vaccine, Hospital, Flaxseed போன்ற வார்த்தைகளையும் அதிக பேர் பயன்படுத்தி உள்ளனர்.
விளையாட்டு
கொரோனா பெருந்தொற்று பெரிய அளவிலும் பாதித்திருந்தாலும், விளையாட்டின் மீது உலக மக்களுக்கு இந்த ஆர்வமும் பிடிப்பும் கொஞ்சமும் குறையவில்லை. 2021 ஆம் ஆண்டில் விளையாட்டு பிரிவில் பல விஷயங்கள் ட்ரெண்டிங் ஆகின. குறிப்பாக இந்தியர்கள் அதிகம் தேடியது 'டோக்கியோ ஒலிம்பிக்ஸ்' (Tokyo Olympics) பற்றி தான். இந்த வரிசையில் அடுத்தாக இருப்பது “Tokyo Olympics," “Paralympics Games," “Gold Medal," “ICC World Test Championship," மற்றும் “Women’s One Day Interational Cricket" ஆகிய வார்த்தைகளை தான் டாப் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளன. நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றதால் இந்தியா அளவில் 'தங்க பதக்கம்' பற்றிய கீவேர்ட்டு மிகவும் ட்ரெண்டிங் ஆகியது குறிப்பிடத்தக்கது.
கலாச்சாரம்
கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் சில முக்கியமானவை 2021 ஆம் ஆண்டில் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது 'கர்ப்பம்' (Garba) என்கிற கீவேர்ட் தான். இதற்கு அடுத்ததாக 'Captain Vikram Batra, Independence Day, Jewellery, Cryptocurrency' ஆகிய வார்த்தைகள் ட்ரெண்டிங்கில் இருந்துள்ளது. 'Shershaah' என்கிற திரைப்படம் வெளியாகிய பிறகு சுதந்திர தினத்தை பற்றி பலர் தேட தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு கலாச்சாரம் சார்ந்த விஷயங்களில் பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இதன்மூலம் தெரிகிறது.
Also read... 2021ம் ஆண்டில் கூகுளை மிஞ்சிய டிக்-டாக் இணையத்தளம் - எப்படி இது சாத்தியமாகியது?
ரீல்ஸ் ட்ரெண்டிங்
2021 ஆம் ஆண்டில் பல பதிவுகள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங் ஆகியுள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மிகவும் பிரபலமாகி உள்ளது. இந்திய அளவில் ரீமிக்ஸ் மற்றும் ஏ.ஆர் எபெக்ட்டுடன் வந்தவை அதிகம் ட்ரெண்டிங்கான ரீல்ஸாக உள்ளன. மேலும் லிப் சிங்க் செய்து பாடபடும் ரீல்ஸும் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. இதே போன்று பல ஹிந்தி திரைப்பட பாடல்களும் இன்ஸ்டா ரீல்ஸில் பிரபலமாகியுள்ளது.
Also read... MS Word டாக்குமென்ட்டில் எக்ஸ்ட்ரா அல்லது பிளாங்க் பேஜை டெலிட் செய்வது எப்படி!
இந்த 2021-இல் பல கீவேர்ட்ஸ் ட்ரெண்டிங் ஆகியிருந்தாலும், அதிக பேர் பயன்படுத்தியது 'கொரோனா' என்கிற வார்த்தையை தான். எனவே அடுத்த ஆண்டு கொரோனா இல்லாத உலகமாக மாற வேண்டும் என்று வேண்டி கொள்வோம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.