முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Year Ender 2021: கனமழை, வெள்ளம் தத்தளித்த சென்னை!

Year Ender 2021: கனமழை, வெள்ளம் தத்தளித்த சென்னை!

சென்னை மழை

சென்னை மழை

Year Ender 2021 | 2021 ஆம் ஆண்டில் இயல்பைவிட அதிக மழையை பெற்றுள்ளது தலைநகர் சென்னை, மழையுடனேயே 2022 ஆம் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறது.

  • Last Updated :

மழை சென்னையை தத்தளிக்க வைப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. வட கிழக்குப் பருவ மழை காலங்களில் அதிக வெள்ள பாதிப்புகளை சந்திக்கும் நகரமாக இருக்கிறது சென்னை. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டில் வட கிழக்குப் பருவ மழை இயல்பை விட கூடுதலாகவே பெய்துள்ளது. சென்னையில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் அதிக மழையைப் பெற்றுள்ளது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புளில் வெள்ளம் புதுந்தது. இதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

2015 ஆம் ஆண்டு என்றவுடன் சென்னை மக்களுக்கு உடனே நினைவுக்கு வருவது ‘சென்னை வெள்ளம்’ தொடர்பான நினைவுகள்தான். அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது. அப்போது அதிகபட்சமாக 1664 மில்லி மீட்டர் மழை பாதிவானது.

ஆனால், 2021ஆம் ஆண்டு அந்த மழை அளவைவிட அதிக மழை சென்னையில் பெய்துள்ளது. அதன்படி, மொத்த மழையின் அளவு 2259 மில்லி மீட்டர் ஆகும். ஆண்டின் இறுதி நாளிலும் கொட்டித் தீர்க்கிறது மழை. இதனால் மழையுடனேயே 2022 புத்தாண்டு பிறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கன மழை

இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 23 நாட்கள் மழை பெய்தது. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் மழை இருந்ததாக வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டின் இறுதி நாளிலும் கொட்டித் தீர்க்கிறத மழை. இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழைக்காலத்தில் சென்னைக்குயில் 1485 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

டிசம்பர் 30ஆம் தேதி ஒரே நாளில், சென்னையில் 7 இடங்களில் 20 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதியான ஆவடியில் 23 சென்டிமீட்டர் மழையும் பூவிருந்தவல்லியில் 20.6 சென்டிமீட்டர் அதி கனமழை பெய்தது.

Read More : மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம்.. சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்

Chennai Rain

Must Read : சென்னையில் பெய்த பேய் மழைக்கு என்ன காரணம்? வானிலை மையம் விளக்கம்

இதனால், சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் குடிநீர்ஆதாரங்களான புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சோழவரம் ஏரி, பூண்டி அணை ஆகியவற்றிற்கு நீர்பிடிப்பு பகுதியிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Read More : திடீர் கனமழையால் திணறிய சென்னை.. கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

Chennai Rain

2021 ஆம் ஆண்டில் இயல்பைவிட அதிக மழையைப் பெற்றுள்ளது தலைநகர் சென்னை, மழையுடனேயே 2022 ஆம் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கிறது.

First published:

Tags: Chennai, Chennai flood, Chennai Rain, YearEnder 2021