Home /News /tamil-nadu /

பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் யமஹா தொழிலாளர்கள் போராட்டம்

பேச்சுவார்த்தை தோல்வி - தொடரும் யமஹா தொழிலாளர்கள் போராட்டம்

போராட்டம் நடத்தும் ஊழியர்கள்

போராட்டம் நடத்தும் ஊழியர்கள்

தொழிற்சங்கம் தொடங்கியதால் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 500 தொழிலாளர்கள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில், ஒரகடம் யமஹா தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிற்சாலையில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டதால் இரண்டு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டிக் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தொழிற்சங்க நிர்வாகிகள், யமஹா நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலாளர்களை பணியமர்த்த யமஹா தொழிற்சாலை சார்பில் 14-ம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டது.

இது தொடர்பாக ஒரகடத்தில் உள்ள தொழிற்சாலை நிர்வாகத்தினர் யமாஹா தலைமையுடன் பேசி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகளைப் பொறுத்திருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Also See..

Published by:Sankar
First published:

Tags: Kanchipuram, Yamaha

அடுத்த செய்தி