முகப்பு /செய்தி /தமிழ்நாடு / யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்!

யமஹா, என்ஃபீல்டு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டம்!

சித்தரிப்புப் படம்

சித்தரிப்புப் படம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் யமஹா மற்றும் என்ஃபீல்டு நிறுவன தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துரையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே சிப்காட் பகுதியில் அமைந்துள்ள யமஹா, ராயல் என்ஃபீல்டு நிறுவன தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். யமஹா தொழிற்சாலையில் சங்கம் அமைக்க தொழிலாளர்களை ஒருங்கிணைத்த இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைக் கண்டித்து, யமஹா தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 12-வது நாளாக, காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்ட அவர்கள் காந்தி ஜெயந்தியையொட்டி காந்தி புகைப்படங்களை வைத்து நூதன போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவாக சிஐடியு தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்று, தொழிற்சாலை நிர்வாகத்துக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களும் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க கோரியும், பணி நிரந்தரம் செய்யக்கோரியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தொழிலாளர்களின் போராட்டத்தால் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொழிற்சாலைகளிலும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக 40 சதவீத உற்பத்தி மட்டுமே செய்யப்பட்டு வருகிறது. 60 சதவீத உற்பத்தி தடைபட்டுள்ளது.

First published:

Tags: Labor Protest, Royal enfield, Yamaha