முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அயர்ன் மேன் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு தயாரான சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் - இதில் உள்ள அம்சங்கள் என்ன?

அயர்ன் மேன் படத்தின் மூலம் ஈர்க்கப்பட்டு தயாரான சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் - இதில் உள்ள அம்சங்கள் என்ன?

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் தனியுரிமை மொழிபெயர்ப்பு அல்காரிதமை கொண்டுள்ளன.

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் தனியுரிமை மொழிபெயர்ப்பு அல்காரிதமை கொண்டுள்ளன.

சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் தனியுரிமை மொழிபெயர்ப்பு அல்காரிதமை கொண்டுள்ளன.

 • 1-MIN READ
 • Last Updated :

  சியோமி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கிளாஸசை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நிறுவனத்தின் இந்த புதிய படைப்பு "சியோமி ஸ்மார்ட் கிளாஸ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஃபேஸ்புக் நிறுவனம் ரே-பானுடன் இணைந்து ஸ்மார்ட் கிளாஸசை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தற்போது சியோமியும் ஸ்மார்ட் கிளாசஸ் சந்தையில் நுழைந்துள்ளது. சியோமி ஸ்மார்ட் கிளாசஸ் மற்ற சாதாரண கண்ணாடிகளைப் போலவே தோற்றமளித்தாலும், இதில் MicroLED ஆப்டிகல் அலை வழிகாட்டி தொழில்நுட்பம் உள்ளது.

  இது OLED ஐ விட அதிக பிரகாசம் மற்றும் நீண்ட ஆயுளைக் தருகிறது. தோராயமாக 51 கிராம் எடையுள்ள இந்த சியோமி ஸ்மார்ட் கிளாசஸ் செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இதனை பயன்படுத்தும் மக்களுக்கு காட்டும். இதுதவிர இந்த கிளாஸ் மூலம் ஒருவர் போன் கால்களை மேற்கொள்ளலாம். புகைப்படங்களை எடுக்கலாம் மற்றும் உங்கள் கண்முன்னே தோன்றும் உரையை மொழிபெயர்க்கலாம். சமீபத்தில், ரேபானுடன் இணைந்து ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் கிளாஸசும் இதே போன்ற அம்சங்களுடன் வந்துள்ளன. இருப்பினும், அந்த கிளாசிஸ் பிரைவசி கன்சர்ன் அம்சங்கள் குறித்து பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வடிவமைப்பை பொறுத்தவரை, சியோமி ஸ்மார்ட் கிளாஸின் லென்ஸ் ஒரு வட்ட வடிவல் வருகின்றன. மேலும் இந்த சாதனம் சூப்பர் ஹீரோ அயர்ன் மேனின் ஸ்மார்ட் கண்ணாடிகளான 'EDITH' மூலம் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டதாக தெரிகிறது. அதாவது கிளாஸின் மூக்கு விளிம்பிற்கு மேலே உள்ள உலோகப் பட்டை அயர்ன் மேன் போட்டிருக்கும் கிளாஸ்களை போன்றிருக்கும். இதுதவிர இந்த கிளாஸின் இடது பக்கத்தின் கீழ் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இது ரியல் டைம் மொழிபெயர்ப்பிற்கான ஸ்கேனராகவும் பயன்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

  சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் தனியுரிமை மொழிபெயர்ப்பு அல்காரிதமை கொண்டுள்ளன. இதுதவிர இந்த ஸ்மார்ட் கிளாசஸ், குவாட் கோர் ஏஆர்எம் செயலி, பேட்டரி, டச்பேட், வைஃபை/ப்ளூடூத் வசதி, ஆண்ட்ராய்டு OS உள்ளிட்ட பலவற்றைக் கொண்டுள்ளன. இதன் செயல்முறையை பொறுத்தவரை, ஒளியியல் அலை வழிகாட்டி தொழில்நுட்பத்தை 180 டிகிரியில் ஒளிபரப்புவதன் மூலம், மைக்ரோலெட் டிஸ்ப்ளே மனித கண்ணுக்கு "துல்லியமாக ஒளி கதிர்களை ஒளிபரப்புகிறது" என்று சியோமி நிறுவனம் விளக்கியுள்ளது.

  செய்தி அறிவிப்பு மற்றும் அழைப்பு விவரங்ககளை அனுப்புவதை தவிர இந்த கண்ணாடிகள் கூடுதலாக, நேவிகேஷன் செய்வது, புகைப்படங்கள் எடுப்பது, டெலிப்ரோம்ப்டர் மற்றும் நிகழ்நேர உரை மற்றும் புகைப்பட மொழிபெயர்ப்புகள் போன்ற செயல்பாடுகளையும் செய்கிறது.

  Also read... பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!

  இதன் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு, சிரமமான நேரங்களில் குறுக்கீடுகளைக் குறைக்கவும் மற்றும் முக்கியமான தகவல்களை சரியான நேரத்தில் காண்பிக்கவும் முக்கிய இன்டெராக்சன் லாக் இதில் செயல்படுத்தப்பட்டுள்ளது. சியோமி ஸ்மார்ட் கிளாஸ்கள் 2.4 மிமீ x 2.02 மிமீ அளவு கொண்ட டிஸ்ப்ளே சிப்பை கொண்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த ஸ்மார்ட் கிளாசஸ் தொடர்பான விலை மற்றும் அவை எப்போது கிடைக்கும் என்ற விவரங்கள், தவிர இதில் உள்ள பிரைவசி கான்சர்ன் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

  First published: