Ki Rajanarayanan : இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன்

சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கிய கி.ராஜநாராயணன், பல்வேறு எழுத்தாளர்களுக்கு முன்மாதியாக திகழ்ந்துள்ளார்.

  • Share this:
    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 99.

    கி.ராஜநாராயணன், 1923-ம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவலில் பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது மகனாக பிறந்த இவர், 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். 1958-ம் ஆண்டு சரஸ்வதி இதழில் 'மாயமான்' என்ற சிறுகதையை, தனது 35-வது வயதில் எழுதினார்.

    இதையடுத்து கரிசல் மண் மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் துன்பங்கள், ஏமாற்றங்களை தனது எழுத்து மூலம் உலகறியச் செய்தார். சிறுகதை, நாவல், குறுநாவல், கிராமிய கதைகள் என இலக்கியத்தில் முத்திரை பதித்த கி.ரா.வின், கதைகள் முன்னணி இதழ்களில் வெளிவந்தன.



    பின்னர், 2007-ம் ஆண்டு இவரின் படைப்புகள் அனைத்தும் 944 பக்கங்களை கொண்ட "நாட்டுப்புறக்கதை களஞ்சியம்" என்ற படைப்பாக வெளிவந்தது. குறிப்பாக, 2009-ம் ஆண்டில் மட்டும் 30 புத்தகங்கள் வெளிவந்தன.

    கோமதி, கண்ணீர், கரிசல் கதைகள், கிராமியக் கதைகள், கொத்தைபருத்தி, புதுவை நாட்டுப்புறக் கதைகள், மாமலை ஜீவா போன்றவை இவரின் முக்கிய படைப்புகள் ஆகும்.

    1991-ம் ஆண்டு "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவலுக்காக கி.ரா.-வுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. மேலும், இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கிய தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கிய சாதனை சிறப்பு விருதுகள் இவரின் எழுத்துக்கு கிடைத்த அக்கீகாரமாக அமைந்தன.

    Must Read : தன் படைப்பின் உரிமையை வாசகருக்கும் பகிர்ந்த கி.ராஜநாராயணன்!

     

    7-ம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற இவர், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகும் அளவிற்கு தானே ஒரு புத்தகமானார்.
    Published by:Suresh V
    First published: