Home /News /tamil-nadu /

தகுதியற்றவருக்கு சாகித்ய அகாடமியின் ‘யுவபுரஸ்கார் விருது’.. ஜெயமோகன் கண்டனம்

தகுதியற்றவருக்கு சாகித்ய அகாடமியின் ‘யுவபுரஸ்கார் விருது’.. ஜெயமோகன் கண்டனம்

ஜெயமோகன்

ஜெயமோகன்

தமிழில் சரியான படைப்பாளிகளுக்கு விருதுகளும், அங்கீகாரங்களும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இலக்கியச் சூழலில் நிலவுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது தகுதியற்ற ஒரு இளம் படைப்பாளிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுக்குழுவில் இருப்பவர்கள் குறைந்தபட்ச வாசிப்புப் பழக்கம்கூட இல்லாதவர்கள் எனவும் எழுத்தாளர் ஜெயமோகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் இலக்கியத்தை வளர்க்கும் விதத்தில் வருடா வருடம் சாகித்ய அகாடமி சார்பில் இளம் படைப்பாளிகளுக்கு யுவபுரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த விருது இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் இயங்கும் இளம் படைப்பாளிகளுக்கு தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தமிழ் மொழிக்கான யுவபுரஸ்கார் விருது காளிமுத்து என்பவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    பொதுவாக தமிழ் மொழியில் சாகித்ய அகாடமி, யுவபுரஸ்கார் போன்ற விருதுகள் தகுதியற்ற, தீவிர இலக்கிய சூழலில் அங்கீகரிக்கப்படாத எழுத்தாளர்களுக்கே தொடர்ந்து வழங்கப்படுகிறது என்ற பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. மற்ற மொழிகளில் இலக்கியத்தில் சரியாக படைப்பாளிகளை அடையாளங்கண்டு விருதுகள் அறிவிக்கப்படும்போது தமிழில் மட்டும் இந்த அவலநிலை தொடர்கிறது என்ற புகாரும் இலக்கிய வட்டத்தில் நீண்ட காலமாக இருக்கிறது.

    Also Read: பொள்ளாச்சி கவிஞர் காளிமுத்துவிற்கு மத்திய அரசின் சாகித்ய அகாடமி "யுவ புரஷ்கர் 'விருது அறிவிப்பு...

    இதற்கு முக்கியக்காரணமாக சாகித்ய அகாடமியில் இடம்பெறும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் தகுதியின் பேரில் தேர்ந்தெடுக்கப்படாமல், சிபாரிசின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. இந்நிலையில்தான் இந்த வருடம் வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    இது குறித்து தமிழ் நவீன இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையத்தில் காட்டமான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். யுவபுரஸ்காருக்கான பட்டியலில் இடம்பெற்றிருந்த அரிசங்கர், றாம் சந்தோஷ் , சுரேஷ் பிரதீப், வேல்முருகன் இளங்கோ, கார்த்திக் புகழேந்தி மட்டுமே இலக்கியத் தகுதிக் கொண்டவர்கள் என்றும் விருது வழங்கப்பட்டுள்ள காளிமுத்து இனிதான் கவிதைகளே எழுதத்தொடங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் விருதுத்தேர்வு குழுவில் இடம்பெற்றுள்ள நடுவர்களுக்குப் பயணப்படி, கெளரவ ஊதியம் தவிர சாகித்ய அகாடமியில் அவர்களுக்கு அக்கறையேதும் இருக்க நியாயமில்லை என அவர் காட்டமான விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.

    ஜெயமோகனின் கருத்து இலக்கிய உலகில் விவாதங்களை எழுப்பியுள்ளது. ஆனால்
    ஜெயமோகனின் கருத்துக்கு சில படைப்பாளிகள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர் .
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Writer, Writer jeyamohan

    அடுத்த செய்தி