Home /News /tamil-nadu /

புளித்த மாவு விவகாரம்: மளிகைக் கடைக்காரரால் தாக்கப்பட்டார் எழுத்தாளர் ஜெயமோகன்!

புளித்த மாவு விவகாரம்: மளிகைக் கடைக்காரரால் தாக்கப்பட்டார் எழுத்தாளர் ஜெயமோகன்!

எழுத்தாளர் ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன்

  • 1 minute read
  • Last Updated :


தோசை மாவு புளித்துப்போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மளிகைக் கடைக்காரரால் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தாக்கப்பட்டார்.

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசிப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன். தமிழ் மற்றும் மலையாளத்தில் பல்வேறு படைப்புகளுக்காக பல விருதுகள் பெற்றவர். சில சினிமாக்களுக்கும் கதை, வசனம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், மளிகைக் கடையில் வாங்கிய தோசை மாவு புளித்துப்போனதால், திரும்பி தந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடைக்காரர்களால் தாக்கப்பட்டதாக வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஜெயமோகன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Published by:Yuvaraj V
First published:

Tags: Writer Jayamohan

அடுத்த செய்தி