'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது!

'செல்லாத பணம்' நாவலுக்காக எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்ய அகாடமி விருது!

இமையம்

அண்ணாமலை எனும் இயற்பெயர் கொண்ட இவர் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புத்தகங்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் கடந்த 2020-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சாகித்ய அகாடமி விருதை செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமையம் பெற உள்ளார்.

அண்ணாமலை எனும் இயற்பெயர் கொண்ட இவர் பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து தமிழ் இலக்கியத் துறையில் இமையம் என்ற புனைபெயரில் இயங்கி வரும் இவர் இதுவரை ஐந்து நாவல்களையும் ஆறு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு நெடுங்கதையையும் எழுதியுள்ளார். கோவேறு கழுதைகள், ஆறுமுகம், மண் பாரம், பெத்தவன், எங் கதெ, நன்மாறன் கோட்டைக் கதை உள்ளிட்ட இவரது பல புத்தகங்கள் புகழ் பெற்றவையாகும்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட இவருக்கு கலைத்துறையைச் சேர்ந்த பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களின் வழியாக தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ``எழுத்தாளர் அண்ணன் இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல் சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வாகியுள்ளது அறிந்து மகிழ்ந்தேன். பாசாங்கில்லாத எளிய மக்களின் மொழி - நெஞ்சம் கனக்கும் கதைக்கரு - சமூகத்தை ஊடுருவும் பார்வை கொண்டு எழுத்துலகில் சாதித்து வரும் அண்ணன் இமையத்துக்கு வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.
Published by:Ram Sankar
First published: