மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அம்மனுக்கு கறி, மீன், முட்டை மற்றும் கருவாடு படையல் வைத்து வினோத வழிபாடு நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கட்டிக்குளம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு கிராமத்து பெண்கள் அசைவ உணவுகளை சமைத்து படையல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
கட்டிக்குளம் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து விநாயகர், மனித பொம்மை, ஜல்லிக்கட்டு காளை, குடை உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கொழுக்கட்டை மற்றும் கறி, மீன், கருவாடு, முட்டை போன்ற அசைவ உணவுகளை சமைத்து பாரம்பரியம் மாறாமல் ஓலைப் பொட்டியில் வைத்து விளக்கேற்றி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்மனுக்கு அசைவ உணவு படைத்து வழிபாடு
இதன் பின்னர் அழகிய சவுந்திர நாயகி அம்மன் கோயிலை சுற்றி வந்து அசைவ உணவுகளை படையல் வைத்து குலவையிட்டு வழிபாடு செய்தனர். மேலும் கோவில் பூசாரி வாயை கட்டிக் கொண்டு, பெண்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை அம்மனுக்கு படையலுக்காக எடுத்து வைத்து அழகிய சவுந்திர நாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Must Read : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் மீது ஒரு எப்ஐஆர் கூட இல்லை - சமூக ஆர்வலர் மேதா பட்கர்
மேலும், அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னர் பெண்கள் தாங்கள் கொண்டு வந்த அசைவ உணவுகளை குடும்பத்தில் உள்ளவர்களுடன் உண்டு மகிழ்ந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.