அடுத்த வாரத்திலிருந்து கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் - அமைச்சர் சேகர் பாபு

அமைச்சர் சேகர் பாபு

அடுத்த வாரத்திலிருந்து கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.

 • Share this:
  இதுதொடர்பாகப செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறும்போது, தி.மு.கவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என எப்போதும் விமர்சனம் செய்யும் பா.ஜ.க தலைவர்களே தி.மு.க ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகளை பாராட்டி வருகின்றனர்.

  தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 47 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்த வாரத்திலிருந்து தமிழில் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்வோரின் செல்போன் எண்களுடன் என விளம்பர பலகைகளும் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

  Also read: 133 வருட பழமையான பள்ளியை தத்தெடுத்த நடிகருக்கு குவியும் பாராட்டு!

  ஏற்கனவே கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள். எனினும், தற்போது யார் அர்ச்சனை செய்கிறார்கள் என்ற குளறுபடி உள்ளது. அதனை போக்கும் வகையில், முதல்நிலை கோயில்கள் என்று எடுத்துக்கொள்ளப்பட்ட 47 கோயில்களில் அந்த விளம்பர பலகைகையை பொருத்த உள்ளோம்.

  வரும் புதன் அல்லது வியாழக்கிழமை, முதல்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ’அன்னைத்தமிழில் அர்ச்சனை’ என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழில் அர்ச்சனை செய்யும் முறை முதலில் பெரிய கோவில்களிலும், அதனைத் தொடர்ந்து சிறிய கோவில்களிலும் கொண்டுவரப்பட உள்ளது. அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யக் கூடிய அர்ச்சகர்கள் இருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: