• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பானிப்பூரியில் புழு: வடமாநில இளைஞரை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்!

பானிப்பூரியில் புழு: வடமாநில இளைஞரை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்!

பானிப்பூரியில் புழு: வடமாநில இளைஞரை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்!

பானிப்பூரியில் புழு: வடமாநில இளைஞரை கட்டி வைத்து அடித்த பொது மக்கள்!

அம்பத்தூர் தொழிற்பேட்டை அடுத்த பட்டரவாக்கம் பகுதியில் பானிபூரியில் புழு இருந்ததால், பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.

  • Share this:
    சென்னை பட்டரவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் மற்றும் தொண்டர்கள் அப்பகுதியில் சாலையோரம் பானிபூரி விற்பனை செய்த வடமாநிலத்தவரிடம் பானிப்பூரி வாங்கி உண்டனர்.

    மேலும் பசியின் காரணமாக வட மாநிலத்தவர் தயார் செய்து தருவதற்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் தாங்களே உருளைக்கிழங்கை எடுத்து பானிபூரியில் வைத்து உண்ண ஆரம்பித்தனர்.

    இதில் ஒரு இளைஞர் எடுத்து உன்ன சென்ற உருளைக்கிழங்கு துர்நாற்றம் வீசியதால், அதனை சோதனை செய்த போது அதில் புழு இருந்தது. மேலும், அந்த உருளைக்கிழங்கு வேகவைத்து  கெட்டுப்போன நிலையில் இருந்தது தெரியவந்தது.

    மேலும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உருளைக்கிழங்கை சூடு செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பானிபூரி விற்று வந்த வடமாநில இளைஞரை அப்பகுதி மக்கள் மாடு கட்டும் கம்பியில் கட்டி வைத்து உதைத்தனர்.

    Also read: உள்ளாட்சியில் வாரோம், நல்லாட்சி தாரோம்.. மதுரையில் போஸ்டர் ஒட்டி விஜய் ரசிகர்கள் அதகளம்!

    பின்னர் வடமாநில இளைஞரிடம்  விசாரித்தபோது, தான் முதலாளி இல்லை எனவும் இதுபோன்று பதினைந்துக்கும் மேற்பட்ட பானிபூரி வண்டிகளுக்கும் முதலாளி வேறு ஒருவர் என்பது தெரியவந்தது.

    வடமாநிலத்தவர்கள் பதினைந்து, இருபது நபர்கள் ஒரே வீட்டில் தங்கி பானிபூரி விற்பனை செய்வதும் அவர்கள் அனைவருக்கும் ஒரே நபர் பானிபூரி தயார் செய்து தருவதும் விசாரணையில்  தெரியவந்தது.

    பின்னர் வடமாநிலத்தவரை வெளுத்து வாங்கிய ஊர் பொதுமக்கள் உருளைக்கிழங்கு மற்றும் பானிபூரியை தரையில் கொட்டி விட்டு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் - கண்ணியப்பன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: