• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் புழுகு முட்டைகள் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் - ஓபிஎஸ் சாடல்

பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் புழுகு முட்டைகள் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் - ஓபிஎஸ் சாடல்

OPS

OPS

முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றனர் அதற்கு சட்டமசோதாவையும் நிறைவேற்றினார்கள் ஆனால் அந்த சட்டமசோதவை முன்னதாகவே நாங்கள் செய்துவிட்டோம்

  • Share this:
    ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றார்.

    செங்கல்பட்டு மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் பல்லாவரத்தை அடுத்த ஈச்சங்காடு சந்திப்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர் செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, சின்னையா, தங்கமணி, நந்தம் விஸ்வநாதன், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    மேடைசில் பேசிய ஒ.பன்னீர்செல்வம், "ஒரு மாநிலம் அனைத்து நிலையிலும் நன்றாக இருக்க சட்டம் ஒழுங்க காப்பாற்றப்பட வேண்டும், மக்கள் பயமின்றி நிம்மமியாக வாழ வேண்டும், அந்த சூழல் இங்கு இல்லை, பெண்கள் தனியாக செல்ல முடியவில்லை, பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் புழுகு முட்டைகள் ஸ்டாலின் மற்றும் திமுகவினர்.

    முதல் கையெழுத்தே நீட் ரத்து என்றனர் அதற்கு சட்டமசோதாவையும் நிறைவேற்றினார்கள் ஆனால் அந்த சட்டமசோதவை முன்னதாகவே நாங்கள் செய்துவிட்டோம் அதைதான் ஸ்டாலின் ரெனிவல் செய்துள்ளார்
    7.5 % மருத்துவ ஒதுக்கீடு திட்டத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியில் வாய்ப்பு கிடைத்துள்ளது அதற்க்கு அதிமுக அரசு தான் காரணம்.

    Also read:  பெட்ரோல் விலை 35 ரூபாயாக குறைக்க நடவடிக்கை – பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்

    இந்த தேர்தல் முழுக்க முழுக்கவே தொண்டர்களுக்காண தேர்தல்
    உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டத்திங்களிலும் அதிமுக வெற்றி பெற்று அதை ஜெயலலிதா அவர்களின் ஆத்மாவிற்கு பரிசாக அளிக்க வேண்டும் என தெரிவித்துக் கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: