• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கண்ணீரைப் போக்கும் நாம், எப்போதும் மன தைரியத்தை இழக்கக் கூடாது - கடலூர் டி.எஸ்.பி சாந்தி பேச்சு

கண்ணீரைப் போக்கும் நாம், எப்போதும் மன தைரியத்தை இழக்கக் கூடாது - கடலூர் டி.எஸ்.பி சாந்தி பேச்சு

டி.எஸ்.பி சாந்தி

டி.எஸ்.பி சாந்தி

  • Share this:
கண்ணீரைப் போக்கும் நாம், எப்போதும் மன தைரியத்தை இழக்கக் கூடாது என்று கடலூரில் காவல்துறை சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி பேசினார். 

இவ்விழாவில் கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி, அரசு சிறப்பு வழக்கறிஞர் க.செல்வபிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சாந்தி பேசுகையில், மகளிர் குற்றவாளிகளைக் கைது செய்வது, பல்வேறு இடர்பாடுகளுடன் காவல் நிலையத்திற்கு வரக்கூடிய பெண்களுக்குப் பாதுகாப்பளிப்பது போன்ற பல பங்களிப்புகளை மகளிர் காவலர்கள் வழங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.

Also read: கீழடி அகழாய்வில் மதம் தொடர்பான எந்த அடையாளமும் கிடைக்கவில்லை - அமைச்சர் பாண்டியராஜன்

மேலும் அவர் பேசுகையில், காவல்துறையில் நாம் பணியாற்றுவதில் பெருமை கொள்ளவேண்டும். மகளிர் காவலர்கள் எதற்கும் அச்சமின்றி பணியாற்றி காவல்துறைக்குப் பெருமை சேர்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் கண்ணீரைப் போக்கும் நாம், எப்போதும் மன தைரியத்தை இழக்கக் கூடாது என்றார். இவ்விழாவில் மகளிர் காவல் ஆய்வாளர்கள் துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் பலர் பங்கேற்றனர்.

வண்ண பலூன்களை வானில் பறக்கவிடும் மகளிர் காவலர்கள்.


விழா நிறைவாக பெண்கள் இவ்வுலகில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பல வண்ண பலூன்களை மகளிர் காவலர்கள் வானில் பறக்கவிட்டனர்.




சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: