Home /News /tamil-nadu /

முதல்முறையாக சென்னை அருகே கடல் தூய்மைப் பணி: 2 மணிநேரத்தில் 500 கிலோ குப்பை!

முதல்முறையாக சென்னை அருகே கடல் தூய்மைப் பணி: 2 மணிநேரத்தில் 500 கிலோ குப்பை!

கோப்புப்படம்

கோப்புப்படம்

இரண்டு மணி நேரப் பணியிலேயே சுமார் 500 கிலோ குப்பையைக் கடலில் இருந்து அகற்றி உள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதன்முறையாக வங்கக் கடல் பகுதியில் கடல் தூய்மைப் பணியில் கடலோரக் காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதி செய்யும் வகையில் ஜூன் 5-ம் தேதி ஆண்டுதோறும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் இந்தியாவின் கிழக்கு கடற்கரைப் பகுதியான சென்னை அருகில் கடலோரக் காவல் படையினர் கடல் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவளம் அருகே ‘ட்ரைவ் இந்தியா’ என்ற தனியார் அமைப்புடன் இணைந்து முதன்முறையாக கடலுக்கு அடியிலும் சென்று தூய்மைப்படுத்தும் பணியில் கடலோரப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மணி நேர பணியிலேயே சுமார் 500 கிலோ குப்பையைக் கடலில் இருந்து அகற்றி உள்ளனர்.

மேலும் பார்க்க: தென்னை மரம் ஏற ’பைக்’ கண்டுபிடித்த விவசாயி- கொண்டாடும் நெட்டிசன்கள்!
Published by:Rahini M
First published:

Tags: Chennai, Sea Cleaning, World Environment Day

அடுத்த செய்தி