• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தொழிலாளி கொலை வழக்கு : திமுக எம்.பி ரமேஷூக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

தொழிலாளி கொலை வழக்கு : திமுக எம்.பி ரமேஷூக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

திமுக எம்.பி ரமேஷ்

திமுக எம்.பி ரமேஷ்

முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • Share this:
    கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டை சேர்ந்த கோவிந்தராசு மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி, சந்தேக மரணம் என பதிவு செய்த வழக்கை, பின்னர் கொலை வழக்காக மாற்றியது.

    இந்த வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் அக்டோபர் 11ஆம் தேதி பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. சிபிசிஐடி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், முந்திரி ஆலையில் இருந்து 7 கிலோ முந்திரியை திருடியதாக கோவிந்தராசு தாக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்தில் எம்.பி. ரமேஷ் இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், வழக்கின் புலன் முடிவடையாததால் ஜாமீன் வழங்கக் கூடாது எனவும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எம்.பி. ரமேஷ் தரப்பில், தொழிற்சாலையில் உள்ள 6 பேர் சேர்ந்து தாக்கியதாக மட்டுமே கூறப்படுவதாகவும், தன் பெயர் குறிப்பிடப்படவில்லை என வாதிடப்பட்டது. மரணமடைந்த கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தரப்பில், எம்.பி. ரமேஷுக்கு காவல்துறையினர் சலுகை காட்டுவதாகவும், விசாரணை முறையாக நடத்தவில்லை என்பதால் சிபிஐ விசாரணை கோரியுள்ளதாகவும், அதனால் ஜாமீன் வழங்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    காவல்துறை தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் சிலரிடம் விசாரிக்க வேண்டி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நிர்மல்குமார், எம்.பி. ரமேஷுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

    மேலும், இந்த கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை திங்கட்கிழமைக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: