• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கூடுதலாக ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கூடுதலாக ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது!

உள்ளாட்சித் தேர்தல்

உள்ளாட்சித் தேர்தல்

கூடுதல் அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையத்துக்கு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ஏன் செயல்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

  • Share this:
    நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆறு மாதம் அவகாசம் வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதேவேளையில், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

    உள்ளாட்சித் தேர்தல் விரைவாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்து. இந்த வழக்கில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கூடுதல் அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையத்துக்கு தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளிப்படுத்திய தலைமை நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ஏன் செயல்படுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.  தமிழகத்தில் தேர்தலை உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதலாக ஒருநாள் கூட அவகாசம் வழங்க முடியாது என்றும்  தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 7.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு: மாணவர்களின் கட்டணத்தை அரசே ஏற்கும்- முதல்வர்!


    ஏற்கனவே மூன்று முறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவகாசம் ஏன் தேவை என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அடுத்த 2 நாட்களில் , எவ்வளவு குறைந்த நாட்களில் தேர்தலை நடத்த முடியும் என்பது தொடர்பாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    அப்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 மாதங்கள் போதும் என்று தேர்தல் ஆணையம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: