தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக
பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சு, இந்தி பேசாத மாநிலங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது. இந்தி மாநிலம்' போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேபோல், இந்தியாவின் இணைப்புமொழி தமிழ்தான் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கருத்து தெரிவித்திருந்தார். இதேபோல், பல்வேறு அரசியல், திரைப் பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நகராட்சிக்கு நிதி நெருக்கடி.. பாஜக கவுன்சிலர் செய்த செயலை பாருங்க...!
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் இந்தி மொழியை திணிப்பதை தமிழக பாஜக ஏற்றுகொள்ளாது. 1965ல் காங்கிரஸ் கட்சி இந்தியை மூன்றாவது மொழியாக படிக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். 1986ல் 2வது தேசிய கல்வியில் மீண்டும் அதனை திணித்தார்கள்.
மேலும் படிக்க: மசூதியில் காவிக்கொடி ஏற்றம்: பாஜகவின் குஷ்பு கண்டனம்
இந்தியாவின் இணைப்புமொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்ற ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தமிழ்மொழி பள்ளிகளை ஏற்படுத்த தமிழக அரசு முயலவேண்டும் என்றும் அவர் வலியுறூத்தினார். ஒன்றாம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்புவரை கட்டாயம் தமிழில் படிக்க வேண்டும் புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தது பாஜகதான். இங்கு எத்தனை பேர் இந்தி பேசுவார்கள் என்று தெரியாது, நான் இந்தி பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.