பொள்ளாச்சி விவகாரம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நியாயம் கிடைக்கும் - கனிமொழி

இராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அரசியலுக்கு மோடி அரசு பயன்படுத்தும் இழிநிலை உள்ளது என்று திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்

news18
Updated: April 16, 2019, 5:06 PM IST
பொள்ளாச்சி விவகாரம்: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நியாயம் கிடைக்கும் - கனிமொழி
கனிமொழி
news18
Updated: April 16, 2019, 5:06 PM IST
நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக வேட்பாளர் கனிமொழி பேசினார்.

தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட எட்டயபுரத்தில் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவிற்கும், ஆர்எஸ்எஸ் பிஜேபிக்கும் இடையேயான போர் இந்தத் தேர்தல். சமூக நீதியை அழிக்க நினைக்கும் இயக்கங்கள் பிஜேபி ஆர்எஸ்எஸ். தமிழ் மொழியின் தொன்மையை வெளி உலகிற்கு தெரியாமல் மறைக்கவே மதுரை கீழடி அகழ்வராய்ச்சி மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. வரலாற்றை, அடையாளங்களை, சமூக நீதியை, பிஜேபி என்ற கோடாரி வெட்டிக் கொண்டிருக்கிறது, அதற்கு எடப்பாடி அரசு துணை போகிறது என்றார்.

மேலும் ஸ்டெர்லைட் கலவரத்திற்குக் காரணம் எடப்பாடி அரசுதான் என ஊடகங்களுக்குத் தெரிவித்த முகிலனை காணவில்லை. ஸ்டெர்லைட் கலவரத்தில் 13 பேரை அரசு கொலை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட போது வந்தார்களா என்று கேள்வி எழுப்பினார் கனிமொழி.

பயிர் காப்பீட்டு இழப்பீடு விவசாயிகளுக்கு வந்து சேரவில்லை. ஆனால் அரசு 100 சதவீதம் இழப்பீடு வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறுகிறது, அப்படியெனில் இழப்பீடு யாருக்குச் சென்றது என்று கேள்வி எழுப்பினார் கனிமொழி.

இராணுவ வீரர்கள் உயிரிழந்ததை அரசியலுக்கு மோடி அரசு பயன்படுத்தும் இழிநிலை உள்ளது. இராணுவ போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் செய்தவர்கள் அது குறித்து பதில் அளிக்கத் தயாரில்லை. நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பொள்ளாச்சி சம்பவத்தில் புகார் கொடுக்க வருபவர்கள் பயமுறுத்தப்படுகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றார் கனிமொழி.

Also watch

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...