• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பேய் பிடித்திருப்பதாக கூறி, சிறுவனை அடித்தே கொன்ற பெண்கள்... ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

பேய் பிடித்திருப்பதாக கூறி, சிறுவனை அடித்தே கொன்ற பெண்கள்... ஆரணியில் அதிர்ச்சி சம்பவம்

Youtube Video

அங்கிருந்த ஆதரவற்ற மக்கள் அவர்களை தட்டிக்கேட்ட நிலையில் அவர்கள் மீதும் பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

  • Share this:
    ஆரணி அருகே 7 வயது சிறுவனுக்கு, பேய் பிடித்துள்ளதாக கூறி தாய் உள்ளிட்ட 3 பெண்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் மாவட்டம் கீழ்வைத்தியணான்குப்பத்தை சேர்ந்தவர் திலகவதி, இவரது 7 வயது மகன் அடிக்கடி கூச்சலிட்டபடி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று, சிறுவனை அழைத்துக்கொண்டு திலகவதி வந்தவாசி பகுதியில் உள்ள இஸ்லாமியர் ஒருவரிடம் பேய் விரட்ட சென்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அவருடன், உறவினர் பெண் பாக்கியலட்சுமி வயது 28, திலகவதி வயது 30, மற்றும் 30 வயதுடைய கவிதா ஆகிய பெண் இருந்துள்ளனர். வந்தவாசிக்கு செல்லும் வழியில் உள்ள கண்ணமங்கலம் பேருராட்சி மண்டபத்தில் சிறுவனுடன் பெண்கள் மூவரும் தங்கியுள்ளனர்.

    இரவு நேரத்தில் சிறுவன் சபரி கூச்சலிட்டதாகவும், அப்போது பெண்கள் மூவரும் இணைந்து சிறுவனை தாக்கியதோடு கழுத்து பகுதியில் கையை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனை, பேருராட்சி மண்டபத்தின் அருகில் வசிக்கும் ஆதரவற்ற மக்கள் தட்டிக்கேட்ட நிலையில் அவர்கள் மீதும் பெண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிது நேரத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து கண்ணமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

    Must Read : "முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு பாலியல் பலாத்தகாரம் அல்ல; விருப்பத்தோடு தான் பழகி உள்ளனர்" - வழக்கின் பிரிவை மாற்ற மாஜிஸ்திரேட் உத்தரவு

    நிகழ்விடத்திற்கு வந்த போலீசாரிடமும் பெண்கள் வாக்குவாதம் செய்ததோடு சிறுவன் உயிருடன் இருப்பதாக கூறி கூச்சலிட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுவனின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில், மூவரும் குடியாத்தம் அருகே உள்ள கே.வி குப்பத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இறந்தது இவர்களது குழந்தை தானா அல்லது குழந்தையை கடத்தி வரப்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: