ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தர்மபுரியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த செறிவூட்டும் கிணறுகள் அமைத்துவரும் பெண்கள்!

தர்மபுரியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த செறிவூட்டும் கிணறுகள் அமைத்துவரும் பெண்கள்!

கடும் வெயிலிலும் உழைக்கும் பெண்கள்

கடும் வெயிலிலும் உழைக்கும் பெண்கள்

காலம் தாழ்ந்த பணியாக இருந்தாலும், பருவ மழையை காத்துக்கொள்ள தர்மபுரி பெண்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கடும் வறட்சியை சமாளிக்கவும், பருவ மழையை பாதுகாத்து கொள்ளவும் தருமபுரி மாவட்ட பெண்கள், ஏரியில் செறிவூட்டும் பள்ளங்கள் அமைத்து வருகிறார்கள். 

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. அதில் தருமபுரி மாவட்டமும் முதன்மையானது. கோடை காலம் மட்டுமின்றி, ஆண்டு முழுவதுமே இந்த மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில், எதிர்வரும் பருவ மழையை சேமிக்க, செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணியை கிராம மக்கள் தொடங்கியுள்ளனர். அரூர் அருகே உள்ள கே.வேட்ரபட்டி கிராம மக்கள்தான், அங்குள்ள பிமா ஏரியில் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர்.

மாண்டுபோன ஏரிக்கு உயிர் கொடுக்கும் விதமாக 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் இந்த பெண்கள் கிணறுகளை அமைத்து வருகின்றனர். இதன்மூலம் மழைக் காலங்களில் இந்த கிணறுகள் நிரம்பி, அதன் மூலம் நீர் உரிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

கடும் வெயிலில், காய்ந்த மண்ணில் கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும் கொண்டு கிணறு அமைப்பது கடுமையான வேலையாக இருந்தாலும், அந்த வேலையில் ஈடுபடுவது தங்களுக்கு மன நிறைவை கொடுப்பதாக அந்த கிராமத்து பெண்கள் கூறுகின்றனர்.

காலம் தாழ்ந்த பணியாக இருந்தாலும், பருவ மழையை காத்துக்கொள்ள இவர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

Also see... கடும் வறட்சியைச் சமாளிக்க செறிவூட்டும் கிணறுகள்! களத்தில் இறங்கிய கிராமத்து பெண்கள்


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Mission Paani, Water