முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதை முக்கியம்" - குஷ்பு அதிரடி..!

"பெண்களுக்கு எந்த சூழ்நிலையிலும் சுயமரியாதை முக்கியம்" - குஷ்பு அதிரடி..!

குஷ்பூ

குஷ்பூ

Kushboo sundar | பெண்களை ஆண்கள் சமமாக பார்க்க ஆரம்பித்தால் உலகம் அழகாக இருக்கும் - குஷ்பு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களுக்கு சுயமரியாதைதான் முக்கியம் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு சமீபத்தில் அவரது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்று பேசிய கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்  நியூஸ் 18 தொலைக்காட்சியின்  வணக்கம்  தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய  நடிகையும், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு பல்வேறு தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது, “பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே எனது சிறு வயது சம்பவத்தை பகிர்ந்தேன், எனக்கு தைரியம் கொடுத்ததே என்னுடைய மகள்கள் தான். ஆணாதிக்கம் என்ற முறை அனைத்து துறைகளிலும் உள்ளது. இன்று வரை ஆண் என்ற கர்வத்திலிருந்து அவர்கள் வெளியே வரவே இல்லை.

இடஒதுக்கீடு இருந்தும் பெண்களுக்கான வாய்ப்புகள் முழுமையாக வழங்கப்படவில்லை. பெண்கள் குறித்த சமூகப்பார்வை மாறினால் மட்டுமே பாதுகாப்பு உறுதியாகும். அரசியல், சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பாகுபாடு தொடர்கிறது. அனைத்துத் தடைகளையும் தகர்த்து பெண்கள் வரவேண்டியது அவசியம்  என்றார்.

மேலும் பேசியவர், “பெண்கள் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டியது தற்போதைய சூழலில் அவசியம். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருகிறது. தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து குடும்பத்தினரிடம் வெளிப்படையாக பேசினேன்.

பெண்களுக்கான கொடுமைகள் குறித்து எந்த நேரமும் புகார்கள் அளிக்கலாம். தேசிய மகளிர் ஆணையம் விரிவாக விசாரணை நடத்தப்படும். ஏதேனும் பிரச்சனை இருந்தால் வாட்ஸ் அப், மெயில் என அனைத்து வகையிலும் பெண் குழந்தைகள் எங்களை அணுகலாம். பெண்களை ஆண்கள் சமமாக பார்க்க ஆரம்பித்தால் உலகம் அழகாக இருக்கும். சுயமரியாதையை காப்பாற்றி கொள்ளவே திமுக, காங்கிரஸிலிருந்து விலகினேன். பெண்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் சுயமரியாதை முக்கியம் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Kushboo, News18 Tamil Nadu, Women's Day