• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வீட்டில் இருந்த நகைகளுடன் டிக்டாக் மூலம் நெருங்கிப் பழகிய தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண் - காரைக்குடி அருகே பரபரப்பு

வீட்டில் இருந்த நகைகளுடன் டிக்டாக் மூலம் நெருங்கிப் பழகிய தோழியுடன் ஓட்டம் பிடித்த பெண் - காரைக்குடி அருகே பரபரப்பு

வினிதா மற்றும் அவரது டிக்டாக் தோழி

வினிதா மற்றும் அவரது டிக்டாக் தோழி

  • News18
  • Last Updated :
  • Share this:
    டிக் டாக் வீடியோ மோகத்தால் கட்டிய கணவரை விட்டு, நகைகளுடன் உயிர்த் தோழியுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார் சிவகங்கை மாவட்டம் தேவ கோட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர்.

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த கடம்பகுடியைச் சேர்ந்தவர் வினிதா. 21 வயதாகும் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் சானா ஊரணியைச் சேர்ந்த ஆரோக்கிய லியோ உடன் திருமணம் நடந்தது. கல்யாணம் ஆன கையோடு கணவனும் மனைவியும் தனிக்குடித்தனம் செல்ல, 45 நாட்களில் ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். தனிமையில் இருந்த வினிதாவுக்கு டிக் டாக் செயலி அறிமுகமாக, அதில் முன்பின் தெரியாதவர்களுடன் இணைந்து வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.

    டிக்டாக்கில் ஏராளமான ஆண் பெண் நண்பர்களுடன் வினிதாவுக்கு தொடர்பு இருந்துள்ளதை தெரிய வந்த கணவர் ஆரோக்கிய லியோ மனைவியை கண்டித்துள்ளார். கண்டித்தும் கேட்காததால் மனைவியை அவரின் தாய் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டார்.

    தனது பொழுதுபோக்கிற்காக டிக் டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்த அவர், அதில் அறிமுகமான ஒரு பெண்ணுடன் வினிதாவுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டுள்ளது. கணவர் அனுப்பிய பணத்தை தோழிக்காக செலவு செய்துள்ளார். தாலிச் செயின் உள்ளிட்ட நகைகளையும் விற்று செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    டிக் டாக் மூலம் அறிமுகமாகி நெருக்கமான தோழியின் பெயரையும் தனது உடலில் வினிதா பச்சை குத்தியுள்ளார். இந்த நிலையில் நேற்று, வீட்டில் இருந்த நகையை எடுத்துக்கொண்டு வினிதா, டிக் டாக் தோழியுடன் ஓட்டம் பிடித்துள்ளதாக தாய் அருள் ஜெயராணி திருவேகம்பத்தூர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

    புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டிக்டாக் குற்றங்களின் கதை!



    டிக்டாக் வீடியோவில் விஷம் குடித்த பெண் உயிரிழப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: