ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பெண்ணின் உடல் முழுவதும் கடித்து பாலியல் வன்கொடுமை... தேனியில் பகீர் சம்பவம்...!

பெண்ணின் உடல் முழுவதும் கடித்து பாலியல் வன்கொடுமை... தேனியில் பகீர் சம்பவம்...!

கைதான நபர்

கைதான நபர்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வேலைக்குச் சென்ற பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர், அந்த பெண்ணின் உடல் முழுவதும் கடித்து வைத்து காயப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழமுத்தனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (38). விவசாயம் செய்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த திருமணமான 35 வயது பெண்ணிடம் தவறாக நடந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

  நேற்று முன்தினம் நாச்சியார்புரம் சாலையில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டிற்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

  இதனை அடுத்து, காம வெறியில் அந்த பெண்ணின் உடல் முழுவதும் காயம் ஏற்படும் அளவுக்கு கடித்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட அப்பெண் க.விலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், ராஜ்குமார் மீது கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

  Published by:Sankar
  First published:

  Tags: Theni