முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வனத்துறை அமைச்சர் சீனிவாசனை ஒரே நாளில் 3 இடங்களில் முற்றுகையிட்ட பொதுமக்கள்

வனத்துறை அமைச்சர் சீனிவாசனை ஒரே நாளில் 3 இடங்களில் முற்றுகையிட்ட பொதுமக்கள்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் ஊராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வந்த வனத்துறை அமைச்சர் சீனிவாசனை அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் முற்றுகை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

திண்டுக்கல் மாவட்டத்தில், 66 வளர்ச்சித் திட்டப் பணிகளை நேற்று தொடங்கி வைக்க வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வந்தார். இதில் முதல் பகுதியாக பாலகிருஷ்ணாபுரம் பகுதிகள் தார் சாலை, குடிநீர், கழிவுநீர் ஓடை உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இப்பகுதியில் உள்ள மைக்கல் ஆண்டவர் புதுத்தெரு பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். தம் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லையென்று புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அவர்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.

Also read: கொரோனா பாதித்த குழந்தைகள் எண்ணிக்கை 24 ஆயிரத்தைக் கடந்தது

இதேபோல், மாலப்பட்டி- தென்போமஸ்கோ நகரில் அடிக்கல் நாட்டும்போது அப்பகுதி மக்களும் அமைச்சரை சூழ்ந்து சாலை வசதி, குடிநீர் இல்லை, கழிவுநீர் ஓடை உள்ளிட்டவை தொடர்பான புகார்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, இதே பகுதியிலுள்ள காமாட்சி நகரிலும் அமைச்சரை அப்பகுதி பெண்கள் குடிநீர் பிரச்னைக்காக முற்றுகையிட்டனர். இப்படியாக நேற்று ஒரே நாளில் 3 இடங்களில் மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர்.

First published:

Tags: Dindigal, Dindigal Sreenivasan