• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருப்பூரில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை!

திருப்பூரில் பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை!

திருப்பூரில் பெண் காவலர் தற்கொலை!

திருப்பூரில் பெண் காவலர் தற்கொலை!

பணி முடித்து வீட்டிற்கு வந்தவுடன் பெண் காவலரான பர்வீன் விஷமருந்தியதால் ஊரக போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் மிண்ணனு வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறையின் பாதுகாப்பு பணியில்  பெண் காவலர் பர்வீன் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று பணி முடிந்து வீட்டிற்கு சென்ற அவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி வயது 23. இவர் 2017-ம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார்.

இந்த பெண் காவலர் திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2:30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இரவு 7:30 மணி அளவில் திடீரென கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து உள்ளார். உடனே மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் பெண் காவலர் பர்வீன் பாவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Also see... வட்டிக்கு மேல் வட்டி...! பரபரப்பை ஏற்படுத்திய இரண்டு உயிரிழப்பு 


Also see... புயல்களை துல்லியமான கணிக்க முயன்றதால் உயிர்ச்சேதம் தவிர்க்க முடிகிறது - சிவன் 

பலத்த சேதத்தை ஏற்படுத்தி ஃபோனி புயல் கரையைக் கடந்தது

Also see... 




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: