தகாத வார்த்தைகளால் திட்டிய ஆய்வாளர்: பெண் காவலர் தற்கொலை முயற்சி..!

மகளிர் தினத்தில் நடந்த வாக்குவாதத்தில் பெண்காவலர் தற்கொலை செய்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகாத வார்த்தைகளால் திட்டிய ஆய்வாளர்: பெண் காவலர் தற்கொலை முயற்சி..!
பெண் காவலர் தற்கொலை முயற்சி
  • Share this:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தின கொண்டாட்டத்தின் போது உதவி ஆய்வாளர் தகாத வார்த்தையில் திட்டியதால் பெண் காவலர்  ஒருவர் காவல் நிலைய மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் தின கொண்டாட்டத்தை ஒட்டி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அப்போது உதவி காவல் ஆய்வாளர் சகுந்தலா, தன்னுடன் பணி புரியும் இசக்கி மீனா என்ற பெண் காவலரை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இசக்கி மீனா காவல் நிலைய மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிகழ்வு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Also see...
First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading