3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்த பெண் - கணவரின் கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்

3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்த பெண் - கணவரின் கள்ளக்காதலால் சிதைந்த குடும்பம்
தற்கொலை செய்த பெண் வீட்டின் முன் கூடியுள்ள உறவினர்கள்
  • News18
  • Last Updated: September 8, 2019, 12:30 PM IST
  • Share this:
உதகை அருகே கணவரின் கள்ளத்தொடர்பால் மனமுடைந்த மனைவி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிசையை ஏற்படுத்தி உள்ளது.

கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் முருகன். சொந்தமாக லோடு வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். 34 வயதான மனைவி வனிதா, 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

வனிதா கடந்த 4-ம் தேதி இரவு தனது மூன்று குழந்தைகளுக்கும், விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் குடித்து தற்கொலை முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த 4 பேரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக நால்வரும் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால் வனிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குழந்தைகள் மூவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கணவர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தினர். முருகன் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் மனமுடைந்த வனிதா குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதை அடுத்து கண்ணன் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார், கைது செய்து சிறையில் அடைத்தனர்.
First published: September 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading