வேலூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க களத்தில் இறங்கிய கிராம பெண்கள்..!

ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் ஒரு கிணறு என்ற வீதம் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களே இணைந்து நீர்நிலைகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூரில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க களத்தில் இறங்கிய கிராம பெண்கள்..!
பணியில் குடியாத்தம் பெண்கள்
  • News18
  • Last Updated: August 24, 2019, 1:52 PM IST
  • Share this:
வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சத்தைத் தீர்க்கும் முனைப்பில் மழைநீரை சேமிக்க 20 ஆயிரம் பெண்கள் ஒன்றிணைந்து ஏரி, கிணறுகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர்வாரும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 2014- 2015 காலகட்டத்தில் தொடங்கப்பட்டது. 4,828 கிணறுகளைத் தூர்வாரும் குறிக்கோளுடன் தொடங்கிய இப்பணியில் இதுவரையில் 2,300 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணறும் 20 அடி ஆழத்தில் 6 அடி அகலத்தில் தூர்வாரப்பட்டுள்ளது.

ஒரு கிணறை தூர்வார 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையில் செலவு ஆகிறது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் என்னும் பகுதியில் ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவுக்கும் ஒரு கிணறு என்ற வீதம் அப்பகுதியைச் சேர்ந்த பெண்களே இணைந்து நீர்நிலைகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.


தினமும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையில் வேலை செய்யும் பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு 160 முதல் 180 ரூபாய் வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர்.

மேலும் பார்க்க: கிணற்றில் நீர் எடுக்க குலுக்கல் முறை: புலம்பும் சென்னைவாசிகள்!

First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading