முகநூல் மூலம் நட்பு... பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு... நடந்தது என்ன?
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 30 சவரன் நகைகள், 5 லட்சம் ரூபாய் பறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தாய் உட்பட 3 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முகநூல் விபரீதம்..பெண்ணிடம் நகை, பணம் பறிப்பு
- News18 Tamil
- Last Updated: July 18, 2020, 4:43 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் 28 வயது பெண். விவாகரத்தானவர். பேஷன் டிசைனராகப் பணிபுரிகிறார்.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாகர்கோவில் கட்டையன்விளையைச் சேர்ந்த கேபிள் நிறுவனம் நடத்தி வரும் 28 வயதான லோகேஷ் குமார் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் லோகேஷ் குமார் பலமுறை பாலியல் உறவில் இருந்துள்ளார்.
பின்னர், கேபிள் தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி 30 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளார். கார் தொழில் செய்யப் போவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாயை அந்தப் பெண்ணிடம் இருந்து வாங்கியுள்ளார். அதேநேரம், தன்னைத் திருமணம் செய்யும்படி இளம்பெண் லோகேஷிடம் வலியுறுத்த, அவர் மறுத்துள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருந்த போட்டோக்கள், வீடியோக்களை வெளியில் விட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி லோகேஷின் தாய் கீதா குமாரி, குடும்ப நண்பரான 70 வயது அய்யாசாமி ஆகியோர் இளம்பெண்ணை அடித்து அவரது செல்போனைப் பறித்துக் கொண்டனர்.
கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில், லோகேஷின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த இளம்பெண். போலீசாரின் பேச்சுவார்த்தையில் லோகேஷ் குமார் இணங்கவில்லை. இதையடுத்து இளம்பெண் மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணனிடம் புகாரளித்தார்.
அந்த புகாரின் பேரில், லோகேஷ் குமாரை போலீசார் கைது செய்யதனர். அவரது தாய் கீதா குமாரி, அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாகர்கோவில் கட்டையன்விளையைச் சேர்ந்த கேபிள் நிறுவனம் நடத்தி வரும் 28 வயதான லோகேஷ் குமார் என்பவருடன் பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவருடன் லோகேஷ் குமார் பலமுறை பாலியல் உறவில் இருந்துள்ளார்.
பின்னர், கேபிள் தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி 30 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியுள்ளார். கார் தொழில் செய்யப் போவதாகக் கூறி, 5 லட்சம் ரூபாயை அந்தப் பெண்ணிடம் இருந்து வாங்கியுள்ளார்.
கடந்த 7ஆம் தேதி லோகேஷின் தாய் கீதா குமாரி, குடும்ப நண்பரான 70 வயது அய்யாசாமி ஆகியோர் இளம்பெண்ணை அடித்து அவரது செல்போனைப் பறித்துக் கொண்டனர்.
கடந்த 8 மற்றும் 9ஆம் தேதிகளில், லோகேஷின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் அந்த இளம்பெண். போலீசாரின் பேச்சுவார்த்தையில் லோகேஷ் குமார் இணங்கவில்லை. இதையடுத்து இளம்பெண் மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணனிடம் புகாரளித்தார்.
மேலும் படிக்க...
அந்த புகாரின் பேரில், லோகேஷ் குமாரை போலீசார் கைது செய்யதனர். அவரது தாய் கீதா குமாரி, அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.