திருப்பூரில் திருமணமான ஐந்தாவது நாளில் புதுமணப்பெண் தற்கொலை

திருப்பூரில் திருமணமான 5 வது நாளில் புதுப்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?

  • Share this:
திருப்பூர் கோவில் வழி அருகே உள்ள அமராவதி நகரைச் சேர்ந்தவர்கள் ராஜு வள்ளியம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு அழகேஸ்வரி, தேவி என 2 மகள்கள். அழகேஸ்வரிக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில், 20 வயதான இளைய மகள் தேவிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்தனர்.

உடுமலையைச் சேர்ந்த தாய் மாமா மகனான 29 வயதான தையல் தொழிலாளி செல்வராஜ்க்கு தேவியை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். நிச்சயம் நடைபெற்ற நிலையில், கடந்த புதன்கிழமை கணியூரில் உள்ள தேவகிரி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

மறு வீட்டிற்காக சனிக்கிழமை தாராபுரம் மாருதி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு புதுமணத் தம்பதி சென்றனர்.  ஞாயிற்றுக்கிழமை காலை புதுமணத் தம்பதி உணவருந்தினர். பின்னர் செல்வராஜ் வெளியில் செல்ல, தேவி அறையில் இருந்துள்ளார்.


மதியம் கறி விருந்திற்காக புது மணப்பெண் தங்கியிருந்த அறை கதவை வெகு நேரமாக உறவினர்கள் தட்டியுள்ளனர். அவர் திறக்காததால் உறவினர்கள் மேல் விட்டத்தை உடைத்து பார்த்த போது தேவி தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் தேவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

தகவலறிந்து சென்ற தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். புது மணப்பெண் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்றோரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தேவி விரும்பிதான் தாய் மாமா மகனை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளனர். ஆனால் விரும்பி திருமணம் செய்து கொண்ட 20 வயது இளம்பெண் 5 வது நாளில் தூக்கில் தொங்கியது ஏன் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆர்டிஓ (RDO) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading