ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் இளம்பெண்கள் ரகளை

சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் இளம்பெண்கள் ரகளை

ஆல்கஹால் மற்றும் காஃபினை குறைக்கவும் : நாம் அனைவரும் தேநீர், காபி போன்றவற்றை தினமும் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். இது உங்கள் சருமத்தை டிஹைட்ரேட் செய்வதால் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சரும வறட்சி, பருக்கள் போன்றவ பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே, ஆல்கஹால் மற்றும் காஃபி அருந்துவது போன்றவற்றை முடிந்த அளவிற்கு தவிர்த்து விடுங்கள்.

சென்னையில் ஸ்டார் ஹோட்டலில் மதுபோதையில் ரகளை செய்த இளம்பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் மது அருந்தும் போது இளம்பெண்களிடையே மோதல் கைகலப்பில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

  சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் சவுமியா. இவர் கத்திப்பாராவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருகில் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீரா என்ற பெண் செல்போனில் சத்தமாக பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து சவுமியா மீராவிடம் நாம் நட்சத்திர ஹோட்டலில் இருக்கும். இங்கு மது அருந்தும்போது கொஞ்சம்  மெதுவாக பேசுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

  பாரில் பலர் முன்னிலையில் சவுமியா கூறியது மதுபோதையில் இருந்த மீராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கடுமையான சொற்களால் சவுமியா திட்டித்தீர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சவுமியா மீராவை பதிலுக்கு வசைப்பாடியுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அங்கிருந்த ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றும் அவர்களால் முடியவில்லை.

  இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் பரங்கிமலை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்த போலீஸார் ரகளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் கைது செய்தனர். ஹோட்டலில் தகராறில் ஈடுபட்ட இருவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: 5 star hotel, Arrest, Beer, Chennai, Crime News, Police, Wine, Woman