மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மற்றும் மய்யம் மாதர் படை அணியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் கமலஹாசன் இந்த கூட்டத்தில் பங்கேற்று மேடையில் பேசினார். அப்போது, “உலகை மாற்றி அமைத்த புரட்சிகளில் பெண்களின் பங்கு அதிகம் இருந்து இருக்கிறது. பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைக்கு காரணம் பெண்கள் அணியும் ஆடைதான் என்கிறார்கள். சில சாமிகள் அரை குறையாக ஆடை அணிந்து இருக்கிறது. அந்த சாமியை பார்த்து தோன்றாதது ஏன் சகோதரிகளான பெண்களை பார்த்து மட்டும் தோன்றுகிறது” என்று கமல் கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “ எங்கள் கூட்டத்தில் கை குழந்தையுடன் வரும் தாய்மார்கள் அதிகம். அதை பார்க்கும் போதே எங்கள் வெற்றி தெரிகிறது. விழா முடிந்த பிறகு அங்கு ஏற்படும் குப்பைகளை அகற்றி செல்லும் கட்சி மக்கள் நீதி மய்யம் கட்சிதான். எங்கள் கட்சியில் 5 பெண் மாநில செயலாளர்கள் இருக்கிறார்கள். மய்யம் மாதர் படை என்ற அணியும் எங்கள் கட்சியில் உள்ளது . பொள்ளாட்சி பாலியல் வழக்கு நடந்து 660 நாட்கள் ஆகின்றது. ஆனால் இன்னமும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவில்லை” என்றும் கேள்வியை எழுப்பினார்.
மேலும், “ மக்கள் நீதி மய்யம் பெண் தொழில் முனைவோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அமைச்சரவையிலும், சட்டமன்றத்திலும் 50 விழுக்காடு பெண்கள் இருக்க வேண்டும் என்பது எனது ஆசை என்ற கமல் பெண்களுக்கு போதிய கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை ” என்றார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பேசியவர், “ பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களை தடுக்க கடும் சட்டங்கள் இயற்றியே ஆக வேண்டும். நான் இருக்கும் போதே பெண்கள் வீரநடை போடுவதை பார்க்க வேண்டும். காந்தி கண்ட கனவை பெண்களுக்கு நான் வாங்கி கொடுக்க விரும்புகிறேன். தாத்தாவின் ஆசையை பேரன் நிறைவேற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
தொழிலதிபர்களை குறிவைக்கும் கமாடிட்டி ஸ்கேம்...
அதன்பிறகு முதல்வரானால் முதல் கையெழுத்து என்னவாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் வழக்கறிஞர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கமல் ஹாசன் நான் முன்பே என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளர்களிடம் கையெழுத்து பெற்று வைத்திருக்கிறேன். அது அவர்கள் கடமை தவறினால் ராஜினாமா செய்து விடுகிறேன் என்ற கையேழுத்து என்று கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்