புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது

புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சிலேயே பெண் ஒருவருக்கு பிரசவம் நடந்துள்ளது

புதுக்கோட்டை அருகே 108 ஆம்புலன்சில் நடந்த பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
ஆம்புலன்சில் நடந்த பிரசவம்
  • News18
  • Last Updated: July 21, 2020, 8:51 PM IST
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் அருகே உள்ள எருக்குமணிப்பட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் இவரது மனைவி ஐஸ்வர்யா (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஐஸ்வர்யா இராப்பூசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடானடியாக புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்தனர். பின்னர் இலுப்பூரிலிருந்து  108 ஆம்புலன்ஸில் ஐஸ்வர்யாவை அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை நோக்கி 108 ஆம்புலன்ஸ்  சென்றபோது  முத்துடையான்பட்டி என்னும் இடத்தில் ஐஸ்வர்யா பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டு துடிதுடித்துள்ளார், இதனையடுத்து ஐஸ்வர்யாவுக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ  உதவியாளர் பூபதிராஜா, ஆம்புலன்ஸ் பைலட் தேவா பாஸ்கரன் ஆகியோர்  பிரசவம் பார்த்தனர்.


மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்


பின்னர் சிறிது நேரத்தில்  சுகப்பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய் ஐஸ்வர்யா மற்றும் குழந்தையை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த ஆண்டில் இலுப்பூர் 108 ஆம்புலன்ஸில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஆம்புலன்ஸிலேயே பிரசவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

படிக்க: ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)
மேலும் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் பத்திரமாக மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஆம்புலன்ஸ் பைலட்டை பொதுமக்கள் பாராட்டினர்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading