பூச்சிக்கொல்லியை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட கணவன், மனைவி உயிரிழப்பு..

பூச்சிக்கொல்லியை மாவு என நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட கணவன், மனைவி உயிரிழப்பு..
(இடது) உயிரிழந்த இளம்பெண்
  • Share this:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே பூச்சிக்கொல்லி மருந்தை  மாவு என்று நினைத்து போண்டா செய்து சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்தார்.

அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர். கண்டிகை பகுதியில் பெரியசாமி என்பவரிடம் அவரது மருமகள் போண்டா செய்வதற்காக மைதா மாவு வாங்கி வரச் சொன்னார். இவர் மைதா மாவுடன், மிளகாய் தோட்டத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து கூடவே வாங்கி வந்துள்ளார்.

இது தெரியாமல் மருமகள் இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து போண்டா செய்து உள்ளார். அதனை தனது கணவர் சுகுமார் மற்றும் மாமியார் லட்சுமி மாமனார் பெரியசாமி, என குடும்பமே சாப்பிட்டனர். பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மருமகள் பாரதி உயிரிழந்தார்.


இது குறித்து தகவல் அறிந்த  அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்டேட்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: April 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading