வீடு காலி செய்வதில் பிரச்னை.. குடும்பமே தற்கொலை.. 2 பேர் கைது.. நடந்தது என்ன?

வீட்டு உரிமையாளர்- கார்த்திகேயன் சகோதரி சுந்தரி

சிவகங்கையில் ஒப்பந்தம் முடியும் முன்பே லீசுக்கு இருந்த வீட்டை உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால் இளம் பெண் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

 • Share this:
  சிவகங்கை அருகே அதப்படக்கி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் மலேசியாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார்.

  அவரது மனைவி 32 வயதான காளீஸ்வரி. இந்த தம்பதிக்கு 12 வயதில் மங்கையர்கரசி என்ற மகளும், 9 வயதில் அபிஷேக் என்ற மகனும் இருந்தனர். பிள்ளைகளின் பள்ளிப் படிப்பிற்காக சிவகங்கை குறிஞ்சி நகரில் மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திகைக்கு வீடு பிடித்து காளீஸ்வரி வசித்து வந்தார்.

  இந்நிலையில் வியாழக்கிழமை நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை தட்டியபோது, திறக்கவில்லை. இதை அடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, காளீஸ்வரி தூக்கிட்ட நிலையிலும், பிள்ளைகள் இரண்டும் விஷம் குடித்த நிலையிலும் உயிரிழந்து கிடந்தனர்.

  மேலும் சுவற்றில் தன் சாவுக்கு காரணம் வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன், அவரது அக்கா நாகஜோதி, அவரது அம்மா சுந்தரிதான் என எழுதி வைத்து இருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சிவகங்கை போலீசார் மூவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், மூவரின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மூன்றரை லட்சம் ரூபாய் கொடுத்து ஒத்திக்கு இருந்த வீட்டு உரிமையாளர் ஒத்திகை முடியும் முன்பே காலி செய்யக்கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

  இதனால் மனமுடைந்த காளீஸ்வரி வியாழக்கிழமை 2 பிள்ளைகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

  வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வீட்டை முன்கூட்டியே காலி செய்யச் சொன்னதற்காக காளீஸ்வரி ஏன் பிள்ளைகளைக் கொன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? வீட்டு உரிமையாளரின் தொந்தரவு குறித்து கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்திருந்தாரா? குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு 32 வயது பெண் செல்ல, வீட்டை முன்கூட்டியே உரிமையாளர் காலி செய்யச் சொன்னதுதான் காரணமா? என போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது சகோதரி தகாத வார்த்தைகளில் காளீஸ்வரியை திட்டியதாக தெரிய வந்தது. அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

  மேலும் படிக்க...

  சென்னையில் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட ராயபுரம், தண்டையார்பேட்டை.. சாதித்தது எப்படி?

  அதனால் சிவகங்கை போலீசார்  வீட்டின் உரிமையாளர் கார்த்திகேயன்மற்றும் அவரது சகோதரி சுந்தரி ஆகியோரை கைது செய்தனர்.அதன் பின்னர் சுந்தரி நிலகோட்டை ஜெயிலிலும் கார்த்திகேயன் சிவகங்கை சப் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: