கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - உடல் உறுப்புகளை தானம் செய்ய வீடியோ மூலம் கோரிக்கை

கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமையால் இறப்பதற்கு முன் வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை - உடல் உறுப்புகளை தானம் செய்ய வீடியோ மூலம் கோரிக்கை
மாதிரிப் படம்
  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம் நீலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஷோபனா என்ற பெண் தனது கணவன் மற்றும் மாமியார், மாமனார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வீடியோ வெளியிட்டு விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருக்கும், எருமனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், தனது கணவனும் அவரது குடும்பத்தினரும் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி வீடியோ வெளியிட்ட ஷோபனா, வீட்டிலேயே தூக்கிட்டு இறந்தார்.


மேலும் படிக்க...

திருப்பதி தேவஸ்தானத்தில் 14-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கொரோனா

அந்த வீடியோவில் தனது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு கூறியுள்ள ஷோபனா, தனது இறப்புக்கு காரணமானவர்களை விட்டுவிடாதீர்கள் எனவும் கூறியுள்ளார்.


மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading