’ஆவியாக வந்து பழிவாங்குவேன்’ என இறுதிக் கடிதம்.. பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் தற்கொலை..

மாதிரிப் படம்

கடலூர் மாவட்டத்தில், பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய வைத்துள்ள கடிதத்தில் ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று எழுதி வைத்துள்ளார். நடந்தது என்ன?

 • Share this:
  தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆவியாக வந்து பழிவாங்குவதாக பாதிக்கப்பட்ட பெண், தற்கொலைக்கு முன் கடிதம் எழுதி வைத்ததாகக்  கூறப்படுகிறது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான பெண். 9 ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், தம்பதிக்கு குழந்தை இல்லை; கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து தன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

  அதே பகுதியைச் சேர்ந்த சின்னகுட்டி என்ற 42 வயதான ராஜேந்திரன், அந்தப் பெண்ணிடம் அடிக்கடி தவறாக நடக்க முயன்றுள்ளார். அந்தப் பெண் மறுத்துள்ளார்.

  இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வலுக்கட்டாயமாக தீவனத்தோட்டத்திற்கு துாக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் ராஜேந்திரன். தாயிடம் நடந்ததைக் கூற அவர் போலீசில் புகாரளிக்கலாம் என சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

  மனவேதனையில் இருந்த அந்தப் பெண், கடந்த 11-ஆம் தேதி வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும் பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அந்தப் பெண் உயிரிழந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவரது வீட்டில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அதில் ராஜேந்திரன் தன்னைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும், தான் இறந்த பின் ஆவியாக வந்து அவரது குடும்பத்தைப் பழிவாங்கப் போவதாகவும் எழுதப்பட்டிருந்தது. பெண்ணின் தாய் அளித்த புகாரின் பேரில் ராஜேந்திரனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  மேலும் படிக்க...இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு, மதிப்பெண் கணக்கீட்டு முறை.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்...  கடிதம், பாதிக்கப்பட்ட பெண் எழுதியதுதானா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஆவியாக வந்து பழிவாங்குவேன் என கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருத்தாசலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: