திருநெல்வேயில் இளம்பெண் தற்கொலை: போலீசார் தொல்லை காரணமா? நடந்தது என்ன?

நெல்லை மாவட்டத்தில், சகோதரர் மீதான வழக்குகள் தொடர்பாக போலீசார் அடிக்கடி வீ்ட்டிற்கு வந்து சென்றதால் மாப்பிள்ளை தர மறுப்பதாகக் கூறி இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

  • Share this:
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான இசக்கியம்மாள். இவரது சகோதரர் 25 வயதான மாரியப்பன் மீது சுத்தமல்லி மற்றும் சீதபற்பநல்லூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் அடிக்கடி விசாரணைக்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். இசக்கியம்மாளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.

ஆனால் மாரியப்பன் மீதான வழக்குகளுக்காக போலீசார் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதால் இசக்கியம்மாளுக்கு மாப்பிள்ளை தர மறுத்து வந்தனர். இதனால், தான் திருந்தி வாழ்வதாக சமீபத்தில் மாரியப்பன் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளார்.

ஆனால் அதன் பின்னரும் போலீசார் விடாமல் விசாரணை என்ற பெயரில் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். மாப்பிள்ளை தர முன்வந்த ஓர் உறவினர் குடும்பத்தினர் இந்தத் தகவல் அறிந்து மறுத்து விட்டனர். மனமுடைந்த இசக்கியம்மாள் கடந்த 10ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.


மேலும் படிக்க...பூசணித் திருவிழா: 745 கிலோ குண்டு பூசணியை விளைவித்த ஜெர்மானியர் (வீடியோ)

அவரை மீட்ட குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்; அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் போலீசார் தான் தனது தற்கொலைக்குக் காரணம் எனக் கூறினார். சிகிச்சை பலனின்றி இசக்கியம்மாள் திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசாரிடம் கேட்டபோது, மாரியப்பன் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி 25 நாட்களுக்கு மேலாகி விட்டதாகவும், குடும்பப் பிரச்னை காரணமாகத்தான் தற்கொலை கொண்டதாக இசக்கியம்மாள் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இசக்கியம்மாள் தற்கொலையின் முழுமையான பின்னணி வெளிவருமா?
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: October 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading