வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்திய மாமியார்... 2 குழந்தைகளோடு தாய் தற்கொலை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வீட்டை காலி செய்ய சொல்லி மாமியாரும், அவரது தம்பியும் வற்புறுத்தியதால் மருமகள் தனது குழந்தைகளோடு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்திய மாமியார்... 2 குழந்தைகளோடு தாய் தற்கொலை
மாதிரிப்படம்
  • Share this:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வளர்ப்பு மகன் ராமதாஸ் (40). இவரது மனைவி பிரியதர்ஷினி (36), மகள் பர்வதவர்த்தினி (16), மகன்கள் திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12)

இவர்கள் அனைவரும் வசந்தா வீட்டில் வசித்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் கணவர் ராமதாஸ் இறந்தார். இந்நிலையில் மாமியார் வசந்தா, அவரது சகோதரர் ராஜேந்திரன் ஆகியோர் பிரியதர்ஷினியிடம் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஆக.3-ம் தேதி இரவு ராஜேந்திரன் மிரட்டி, பிரியதர்ஷினியை தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த பிர்யதர்ஷனி ஆக.4ம் தேதி காலை தனது மூன்று குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு தானும் அருந்தினார்.


இதையடுத்து சம்பவ இடத்திலேயே பிரியதர்ஷினி இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த மூன்று குழந்தைகளும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் மகள் பர்வதவர்த்தினி, மகன் திருநீலகண்டன் ஆகியோர் இன்று அதிகாலை இறந்தனர். ஹரிகிருஷ்ணனும் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: August 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading