மருத்துவமனையில் பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபருக்கு செருப்படி வைத்தியம்

வேலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பெண் ஒருவர் செருப்பால் அடிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

  • Share this:
வேலூரில் பிரதானமான அரசு மருத்துவமனை அடுக்கம்பாறையில் உள்ளது. சாதாரண நாட்களிலேயே இந்த மருத்துவமனையில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம்.

தற்போது கொரோனா காலம் என்பதால் கூட்டம் மிகவும் குறைந்து விட்டது. எனினும் கொரோனா தொற்று மற்றும் அவசர சிகிச்சைகளுக்காக மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் தங்குமிடத்தில் செவ்வாய்க்கிழமை காலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அமர்ந்திருந்தார்.

அவருக்கு எதிர்ப்புறம் அமர்ந்திருந்த ஒரு நபர் அந்தப் பெண்ணைப் பார்த்து கண்ணடிப்பதும், கையை உதறி சிக்னல் காட்டுவதுமாக இருந்தார். சிறிது நேரத்தில் அந்தப் பெண் அமர்ந்திருந்த பகுதியில் போய் அமர்ந்தார்; அடுத்து பெண்ணருகே சென்ற அவர் பெண்ணின் கையைப் பிடித்துள்ளார்.


இதனால், ஆத்திரமடைந்த அந்தப் பெண், தன் காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக அடித்துள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

திடீரென இந்தத் தாக்குதலை எதிர்பாராத அந்த நபர் நிலைகுலையவே அங்கிருந்தவர்கள் அவரைப் பிடித்து மருத்துவமனை காவல் மையத்தில் ஒப்படைத்தனர்.முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் வேலூர் அடுத்த கண்ணமங்கலம் கம்பம் பேட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதான பரசுராமன் என்பது தெரியவந்தது.

மேலும் படிக்க...

பெட்ரோல் & டீசல் விலை - வாகன ஓட்டிகளுக்கு சற்றே ஆறுதல்

காசிக்கே அல்வா கொடுத்த கூட்டாளி கைது - தனி ரூட் போட்டவர் சிக்கியது எப்படி?

தற்போது கொரோனா காலம் என்பதால் குறைந்த அளவு போலீசாரே பணியில் இருப்பதால் உடனடியாக அவர் பாகாயம் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு விசாரணை நடந்து வருகிறது.

சில்மிஷத்தில் ஈடுபடும் நபரைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல் அவரை செருப்பால் அடித்த பெண்ணின் வீரத்தை மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்கள் பாராட்டினர்.
First published: June 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading